குவாமிச்சன் ஏரி

குவாமிச்சன் ஏரி (Quamichan Lake) கனடா நாட்டின் பிரிட்டிசு கொலம்பியா மாகாணத்தின் வான்கூவர் தீவில் உள்ள கோவிச்சின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும். தங்கன் நகரத்திற்கு வடகிழக்கில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இந்த ஏரி அமைந்துள்ளது[2]. குவாமிச்சன் ஏரியும் இங்கு அமைந்துள்ள மற்றொரு ஏரியான சோமெனோசு ஏரியும் 11000 ஆண்டுகளுக்கு முன்னர் பனிப்பாறை ஊற்றுகள் விலகி உருவானதாகக் கருதப்படுகிறது. இவ்விரண்டு ஏரிகளும் கோவிச்சன் ஆற்றுக்கு நீரை வழங்குகின்றன. குவாமிச்சன் ஏரியின் தண்ணீர் வழிந்தோடி குவாமிச்சன் கிளைநதியாக ஓடி சோமெனோசு ஏரியின் தண்ணீர் வழிந்தோடும் சோமெனோசு கிளைநதியுடன் இணைகிறது. பின்னர் இவை கோவிச்சன் ஆற்றில் கலக்கின்றன [3]. கோவிச்சன் ஆற்றுப்பள்ளத்தாக்கு வாரியம் இவ்விரண்டு ஆழமற்ற ஏரிகளையும் ஒரே மாதிரியான சூழல் நிபந்தனைகள் கொண்டு அடையாளப்படுத்துகிறது.[3]

 • பண்ணைகள் மற்றும் வீடுகளில் இருந்து அதிக அளவு ஊட்டச்சத்து ஏரிகளைச் சூழ்ந்துள்ளது.
 • கோடையில் குறைவான நீர்வரத்து மற்றும் துண்டிக்கப்பட்ட நீர் வெளியேற்றம் காரணமாக போதுமான அளவு சுகாதாரமின்மை காணப்படுகிறது.
 • அதிகரிக்கும் பூஞ்சை வளர்ச்சி
 • ஏரிகள் தூர்ந்து போவதால் (தாவரங்கள் சிதைந்து ஆக்சிசன் குறைதல்)
 • தீவிரமடையும் வெப்பம்
குவாமிச்சன் ஏரி
Quamichan Lake
ஆள்கூறுகள்48°48′05″N 123°39′38″W / 48.80139°N 123.66056°W / 48.80139; -123.66056ஆள்கூறுகள்: 48°48′05″N 123°39′38″W / 48.80139°N 123.66056°W / 48.80139; -123.66056
Part ofகோவிச்சன் நீர்நிலை
முதன்மை வெளிப்போக்குகுவாமிச்சன் கிளைநதி
Surface area313.4 ha (774 ஏக்கர்கள்)[1]
அதிகபட்ச ஆழம்8.2 m (27 ft)[1]
Islandsரெயின்போ தீவு

2016 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில், நான்கு நாய்களை பாசிகள் கொன்றன என்ற செய்தி பரவியதால் இந்த ஏரிகளிலுள்ள பாசிகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன[4].

பெயர்க்காரணம்தொகு

குவாமிச்சன் என்பது ஓர் பேய் என்ற நம்பிக்கை கோவிச்சன் மக்களிடம் இருந்தது. அப்பேய் குழந்தைகளை திருடி சாப்பிட்டு வந்தது. கோவிச்சன் மக்களின் துணைக்குழு மக்களான குவா அமுட்சன் பிரிவு மக்கள் சமூகம் ஏரிக்கு அருகில் இருந்ததால் குவாமிச்சன் என்ற பேயின் பெயரை ஏற்றுக் கொண்டனர்[5].

வாழ்விடம்தொகு

குவாமிச்சன் ஏரியின் பரப்பளவு 313.4 எக்டேர் ஆகும். இதன் அதிகபட்ச ஆழம் 8.2 மீட்டர் மற்றும் சராசரி ஆழம் 4.7 மீ. ஆகும். ஏரியை சுற்றியுள்ள நீர்பள்ளத்தாக்கு பரப்பளவு 16.3 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்[1]. கோவிச்சன் பகுதியின் சிறப்பு இன மரமான கேரி ஓக் மரப்பாதுகாப்பு அமைவிடம் ஏரிக்கு அருகில் உள்ளது.[6]

பூஞ்சைகளுக்கும் ஏரி மீன்களுக்கும் இந்த ஏரி ஒரு புகலிடமாக உள்ளது.

இப்பகுதியைச் சுற்றி வாழ்ந்த குடியிருப்பு வாசிகளும் விவசாயிகளும் சேர்ந்து குவாமிச்சன் ஆற்றுப்பள்ளத்தாக்கு மேற்பார்வையாளர் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி குவாமிச்சன் மேற்பார்வையாளர்கள் என்று அதற்குப் பெயரிட்டு ஒரு குழுவை 2007 ஆம் ஆண்டு நிறுவினர். இக்குவினர் ஏரியின் பாதுகாப்பில் கவனம் செலுத்தினர்.

2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் , சுமார் 65,500 மீன்கள் ஏரிக்கு மீன்குஞ்சு பொரிப்பகம் மூலம் ஏரிக்குள் சேர்க்கப்பட்டன.

2014 ஆம் ஆண்டு மீன்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கும் நோக்கில் 1500 அடி நேர்கோட்டு குமிழ் சுவாசத் திட்டம் கட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வடக்கு கோவிச்சன் நகராட்சி, தங்கன் ரோட்டரி சங்கம், டிம்பர் மேற்கு வன மாநகராட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் இதற்கு உதவின. பாசிகள் குறைவால் ஏற்படும் ஆக்சிசன் இழப்புக்கு இத்திட்டத்தினால் கிடைக்கும் ஒடுக்கப்பட்ட காற்று பயனளிக்கும்.[7].

குடியிருப்போருக்கான வசதிகள்தொகு

ஆர்ட் மான் பூங்கா கடற்கரையில் விளையாடுமிடம் மற்றும் படகுச் சவாரி போன்ற வசதிகளை நகராட்சி நிர்வாகம் குடியிருப்பு மக்களுக்காக செய்து கொடுத்துள்ளது. விக்டோரியா நகரத்திற்கு வடக்கிலுள்ள வான்கூவர் ஏரிக்கரை குடியிருப்புகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன [8]. இவ்வாறான ஓர் ஏரிக்கரையோர குடியிருப்பில் வில் மில்லர் என்ற புகழ்பெற்ற ஐரிசு பாடகர் வாழ்ந்தார் [9].

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 1.2 State of Water Quality of Quamichan Lake 1988-1995. Ministry of Environment, Lands and Parks. April 1996. Archived from the original on 2017-04-19. https://web.archive.org/web/20170419162435/http://www.env.gov.bc.ca/wat/wq/quality/wqql/wqql.html. பார்த்த நாள்: 2017-07-10. 
 2. BC Names/GeoBC entry "Quamichan Lake"
 3. 3.0 3.1 "Quamichan and Somenos Lakes". Cowichan Watershed Board. 17 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
 4. Wilson, Deborah (2016-10-28). "Toxic algae suspected in Cowichan-area dog deaths". CBC News. http://www.cbc.ca/news/canada/british-columbia/north-cowichan-quamichan-lake-toxic-algae-dog-deaths-1.3826902. 
 5. T.W. Paterson, "Mapmakers Have Been Unkind to the Original Name-Givers," Cowichan Valley Citizen, 16 November 2005 (quoted in BC Names/GeoBC reference)
 6. Rondeau, Andrea (Jan 29, 2015). "Join the planting party in Cowichan". Cowichan Citizen. Archived from the original on ஏப்ரல் 2, 2015. https://web.archive.org/web/20150402174116/http://www.cowichanvalleycitizen.com/living/join-the-planting-party-in-cowichan-1.1747375. 
 7. Santini, Kathy (Sep 11, 2014). "Quamichan Lake trout breathing easier". Cowichan News-Leader Pictorial. http://www.cowichannewsleader.com/news/274368101.html. பார்த்த நாள்: 17 March 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
 8. McKinley, Johri (Jan 8, 2015). "Cowichan’s most valuable home clocks in at nearly $2.7 million". Cowichan News-Leader Pictorial. Archived from the original on ஏப்ரல் 2, 2015. https://web.archive.org/web/20150402143450/http://www.cowichannewsleader.com/news/287345611.html. 
 9. Litwin, Grania (Aug 26, 2013). "Irish Rover and wife live dream in Duncan". Vancouver Sun. Archived from the original on 31 டிசம்பர் 2016. https://web.archive.org/web/20161231173644/http://www.vancouversun.com/business/irish+rover+wife+live+dream+duncan/8829157/story.html. பார்த்த நாள்: 17 March 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாமிச்சன்_ஏரி&oldid=3241159" இருந்து மீள்விக்கப்பட்டது