குவாம் தொழில்நுட்பம்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
குவாம் தொழினுட்பம் ( QAM TECHNOLOGY)
பொழுது போக்கு உலகில் கேபிள் டிவி என்பது அடித்தட்டு மக்களுக்கு ஒரு இன்றியமையாத தேவையாக உள்ளது.
அதே நேரம் நடுத்தரவர்கத்தினர் கேபிள் டிவி யிலும் DTH லும் தங்களின் பொழுதினை கழிக்கின்றனர்.
மேல்தட்டு மக்களோ கேபிள் டிவி யின் உயர்மட்ட தொழில்நுட்பமாக DTH மற்றும் DTH HD ஆகியவற்றை தேர்ந்தெடுக்கின்றனர்.
கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தங்களுக்கான பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இடைவிடாத சர்வீஸ் வழங்குகின்றனர்.
இவ்வித சர்வீஸினை மற்ற ஒளிபரப்பாளர்கள் எக்காலத்திலும் தர இயலாது.
இச்சூழலில் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு வரப்பிரசாதமாக ஒரு உயர்மட்ட தொழினுட்பம் வந்துள்ளது.
அதை அறிந்து கொள்ள நீங்கள் ஆவலாக உள்ளீர்கள்தானே!
QAM (Quadrature Amplitude Modulation) குவாம் என்னும் நவீன தொழினுட்பம் இப்போது கேபிள் டிவி யில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இப்போது டிஜிட்டலுக்கு மாறும் சூழல் ஆப்பரேட்டருகளுக்கு ஏற்பட்டிருக்கும் வேளையில் குவாமின் முக்கியத்துவமும் உணரப்படுகிறது. ஏனெனில் டிஜிட்டல் வீடியோ பரிமாற்றத்தில் குவாம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இங்கே குவாம் மாடுலேட்டர்களில் டிஜிட்டல் சேவைகள் புகுத்தப்பட்டு உங்களின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வாடிக்கையாளர்களின் வீடு வரை வீடியோ,ஆடியோ மற்றும் டேட்டா சிக்னலை தரமுடன் பரிமாறப்படுகிறது. இது பெரும் தொழிற்சாலைகளில் பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் கன்வேயர் பெல்டுகள் போலத்தான்.
குவாம் தொழினுட்பம் நாம் முன்னர் VSB மற்றும் SAW FILTER MODULATOR களை பயன்படுத்தியது போல ஒரு ரேக் கில் பல தொழில்நுட்ப அட்டைகளை சொருகுமாறு முறைப்படுத்தப்பட்டிருக்கும்.
ஒரு குவாம் சேனல் என்பது 38.8 Mbps டவுன்லோடு வேகத்தில் 3 HD சானல்களையும் அல்லது 10 முதல் 12 டிஜிட்டல் சானல்களையும் ஒரு நொடிப்பொழுதில் கடத்தக் கூடியது. இவையனைத்துமே நாம் தற்போது கொடுத்துக் கொண்டிருக்கும் அனலாக் சான்லின் ஒரு சானலின் இடத்தை மட்டுமே பிடிக்கும்.
அதாவது நாம் தற்போது Ch-12 ல் பொதிகை சானல் மட்டும் தருவதாக வைத்துக் கொள்வோம்.
நீங்கள் QAM மாடுலேட்டர் பொருத்தினால் அதே Ch-12 இடத்தில் 10 முதல் 12 டிஜிட்டல் சானல்களையும் அல்லது 3 HD சானல்களையும் தர இயலும்.
இதனாலேயே சமீபகாலமாக கேபிள் MSO க்கள் இணையப்பக்கங்களும், டிஜிட்டல் வீடியோக்களும் இணைத்து ஒளிபரப்ப குவாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள்.
இதேபோன்று VOD எனப்படும் Video On Demand தேவைக்கேற்ற ஒளிபரப்பு திட்டங்களை முறைப்படுத்தி அனுப்பவும் குவாம் உதவுகிறது.
சரி, எட்ஜ் குவாம் (EDGE QAM) என்ன என்பதை அறிவோமா?
VOD சர்வீஸ் மற்றும் டிஜிட்டல் வீடீயோ இரண்டையும் தருவது குவாம்.
VOD சர்வீஸ் மற்றும் டிஜிட்டல் வீடீயோ மேலும் டேட்டா வாய்ஸ் கொண்ட இண்டெர்நெட் புரொட்டோகால் ஆகிய மூன்றையும் இணைத்துக் கொடுப்பதே எட்ஜ் குவாம் தொழினுட்பம்.
ஆக எட்ஜ் குவாம் தொழில்நுட்பமானது ஒரு பல்நோக்கு தொழில்நுட்பமாக (Multi Purpose Technology) ஆகவும் ஆப்பரேட்டர்களின் கடைசி எல்லை வரை (Edge of the Network) தொல்லையின்றி இயங்கும் ஒரு தொழில்நுட்பமாகவும் பார்க்கப்படுகிறது. இதனாலேயே EDGE QAM என அழைக்கப்படுகிறது.
அற்புத கண்டுபிடிப்பு
தேவைகள் மிகவும் கொண்ட கேபிள் தொழில்நுட்பத்தில் எட்ஜ் குவாம் (Edge QAM) பற்றிய விழிப்புணர்வு பெரும்பான்மையோரிடம் இல்லாதது வியப்புக்குரியதாக உள்ளது.
இதனாலேயே என்னவோ கடந்த 2 வருடங்களாக Motorola, Scientific Atlanta, Cisco, Arris, Big Band Networks, Harmonic Inc, RGB Spectrum போன்ற 7 நிறுவனங்கள் மட்டுமே எட்ஜ் குவாம் மாடுலேட்டர்களை உற்பத்தி செய்து வருகின்றன.
அதிகப்படியான விலை, தேவைக்கேற்றார்போல் கிடைக்காதது மற்றும் உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்பு போன்றவை ஆப்பரேட்டர்களை குவாம் தொழில்நுட்பத்தில் கால் பதிக்க தயங்க வைக்கின்றன.
இப்போது குவாம் தொழில்நுட்ப மீது பரவலான ஒரு புரிதல் ஏற்பட்டு ஆப்பரேட்டர்கள் பயன்படுத்த தொடங்கியிருப்பதால் எட்ஜ் குவாமின் விலையும் சரியத் துவங்கியுள்ளது. பிற நிறுவனங்களும் உற்பத்தி செய்ய முன்வந்துள்ளன.
இன்றைய நிலவரப்படி $250 அமெரிக்க டாலருக்கு கிடைக்கிறது. ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,70,000)
8 முதல் 24 கார்டுகள் பொருத்தும் மாடுலேட்டர் ரேக்குகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன.
இனி இதன் தேவையைப் பொறுத்து உற்பத்தியும் கூடினால் விலை மேலும் சரிய வாய்ப்பிருக்கிறது.
இப்போது இந்த குவாம் தொழில்நுட்பமானது குறைந்த உற்பத்தியாளர் மற்றும் இணைய இணைப்பு வழங்குநர்களின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இதில் முதலீடு செய்ய தயங்கவைக்கிறது.
ஏனெனில் ஆப்பரேட்டர்களைப் பொருத்தவரை தங்களின் முதலீட்டில் பல கசப்பான அனுபவங்களை ஏற்கனவே பெற்றுள்ளதால் அவர்களை மீண்டும் முதலீடு செய்ய யோசிக்க வைக்கிறது.
எட்ஜ் குவாமானது வளமான தொழில்நுட்பத்திலிருந்தாலும் VOD மற்றும் Session Manager ஆகியன முறையாக இயங்கினால்தான் வெற்றிகரமாக செயல்படும்.
அவ்வாறு வெற்றிகரமாக செயல்படும் இடங்களையும், குவாம் தொழில்நுட்ப வல்லுநர்களையும் சார்ந்து அடுத்தடுத்து இந்த தொழினுட்பம் பரவலாக பரவி வருவது கேபிள் டிவி தொழிலுக்கு ஒரு வரப்பிரசாதம் தான்.
இந்த அருமையான தொழில்நுட்பத்தினை Digital MSO வினர் செலவினைப் பொருட்படுத்தாமல் பரவலாக பயன்படுத்த ஆரம்பித்தால் கேபிள் டிவி தொழில் நவீனத்தின் உச்சியைத் தொட்டுவிடும்.
எனவே MSO க்கள் இது குறித்து முழுவதும் அறிந்து கொண்டு ஆப்பரேட்டர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் கேபிள் டிவி நவீனமயமாக்கம் என்பதற்கு அர்த்தம் கிடைத்துவிடும்.
DTH HD தொழில்நுட்பத்தை இப்போது பார்த்து வருபவர்கள் முழுமையான HD சானல்களை காண இயலாது.
ஆனால் குவாம் தொழில்நுட்பத்தில் மிக அதிக எண்ணிக்கையில் HD சானல்களை தரமுடியும் என்பதால் அனைத்து தர மக்களும் கேபிள் டிவி வாடிக்கையாளர்களாக மாறும் காலம் நெருங்குகிறது.
ஜனவரி 2017 நிலவரப்படி திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரையினை எழுதியுள்ளேன்.
பிப்ரவரி 8,9,10 தேதிகளில் புது டெல்லியில் நடைபெறவுள்ள Convergence 2017 என்னும் உலகம் தழுவிய ஒரு எக்ஸ்போ வில் கலந்துகொண்டு மேலும் குவாம் குறித்தும் ஏனைய பிற தொழில்நுட்பங்களை அறிந்து அடுத்த கட்டுரையில் உங்களுடன் இணைகிறேன்.
கட்டுரை: கோவை ரவீந்திரன் :