குவியமில்லா அமைப்பு
குவியமில்லா அமைப்பு (Afocal system) என்பது ஒளியியல் அடிப்படையில் ஒளியை முழுமையாகக் குவிக்கவோ அல்லது ஒரு புள்ளியிலிருந்து விரிக்கவோ இயலாத ஒரு அமைப்பாகும். அதாவது குறிப்பிட்ட குவிய துாரம் என்பது இவ்வமைப்பில் இல்லை.[1]
இவ்வமைப்பு ஒரு இணை ஒளியியல் சாதனங்களால் உருவாக்கப்படுகிறது. அவற்றின் நீளம் இரண்டு ஒளியியல் சாதனங்களின் குவிய துாரங்களின் கூடுதலுக்குச் சமம் (d = f1+f2).
எடுத்துக்காட்டாக நட்சத்திரங்களைக் காண உதவும் தொலைநோக்கிகளில் குவியமில்லா அமைப்பு பயன்படுகிறது. இதில் பொருளும் வெகு தொலைவில் உள்ளது, பிம்பமும் வெகு தொலைவில் உருவாகிறது (அதாவது ஒளி இணை கற்றை ஆக்கப்படுகிறது). [2]
இவ்வமைப்பில் இணை கற்றையின் விரிகை மாற்றப்படுவதில்லை. ஆனால் உருப்பெருக்கத்தை மாற்றுவதன் மூலம் அதன் அகலம் மாற்றப்படுகிறது. அப்படிப்பட்ட தொலைநோக்கியின் உருப்பெருக்கம்:
குவியமில்லா அமைப்புகள் சீரொளி (லேசர்), அகச் சிவப்பு கதிர்கள் அமைப்பு, நிழற்படக் கருவி மற்றும் தொலைநோக்கி ஆகியவற்றில் ஒளிக்கற்றைகளைச் சீர்செய்ய உதவுகிறது.[3] நிழற்படக் கருவியும் தொலைநோக்கியும் இணைந்து உருவாக்கும் நிழற்படக் கலை குவியமில்லா நிழற்படக் கலை எனப்படுகிறது.