குவியம் (ஒளியியல்)

வடிவ ஒளியியலில், குவியம் என்பது ஒரு பொருளிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் குவியும் புள்ளி ஆகும்.[1] கருத்துரு அடிப்படையில் குவியம் என்பது ஒரு புள்ளி எனினும், உண்மையில் குவியத்துக்கு இட அளவு உண்டு. இது தெளிவில் வட்டம் (blur circle) எனப்படும். இந்தச் சீர்மையற்ற குவிதல் ஒளியியல் பிறழ்ச்சியினால் ஏற்படக்கூடும். குறிப்பிடத்தக்க அளவில் பிறழ்ச்சி இல்லாவிட்டால், மிகச் சிறிய அளவான ஏரி வட்டு (Airy disc) எனப்படும் தெளிவில் வட்டம் உருவாகும். இது ஒளியியல் தொகுதியின் ஒளி உட்செல்லும் துளையினால் ஏற்படும் ஒளி விலக்கத்தினால் (diffraction) உருவாகிறது. துளையின் விட்டம் பெரிதாகும்போது பிறழ்ச்சியும் அதிகரிக்கும்.

கண் ஒரு புள்ளியிலிருந்தான எல்லா ஒளிக்கதிக்களையும் சேகரித்து விழித்திரையில் உள்ள விம்பத்தின் ஒத்த புள்ளியில் குவியச் செய்கிறது.
பகுதி குவிநிலையில் உள்ள விம்பம். பெரும்பாலான பகுதிகள் பல்வேறு அளவிலான குவியாநிலையில் உள்ளன.

முதன்மைக் குவியம் அல்லது குவியப் புள்ளி என்பது ஒரு சிறப்புக் குவியம் ஆகும்.

  • ஒரு வில்லை, அல்லது கோள அல்லது பரவளைவு ஆடிக்கு, அவற்றின் அச்சுக்கு இணையாகச் செல்லும் இணை ஒளிக்கதிர்கள் குவியும் இடமே இது. ஒளி ஒரு வில்லையின் இரண்டு பக்கங்களினூடாகவும் உட்செல்ல முடியும் என்பதால், ஒரு வில்லைக்கு பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு குவியப் புள்ளிகள் இருக்கும்.

மேற்கோள்கள்தொகு

  1. "Standard Microscopy Terminology". University of Minnesota Characterization Facility website. 2008-03-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-04-21 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவியம்_(ஒளியியல்)&oldid=3241185" இருந்து மீள்விக்கப்பட்டது