குவியாடி.எந்த வளவளப்பான பரப்பு தம்மில் விழும் ஒளிக்கதிர்களை திருப்பவல்லதோ அப்பரப்பு ஆடி எனப்படும்.ஆடிகள், சமதள ஆடி,குவியாடி,குழியாடி என மூன்று வகைப்படும்.ஒளித்திருப்பம் அல்லது ஒளி எதிரொளிப்பு குவிந்த பரப்பில் ஏற்படுமானால் அது குவியாடி எனப்படும்.மாறாக ஒளித்திருப்பம் குழிந்த பரப்பில் தோன்றுமானால் அது குழியாடி எனப்படும்.குழியாடிகளும்,குவியாடிகளும் ஒரு கோளத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் இவ்வகை ஆடிகள் கோளவாடிகள் எனவும்படும்.சமதளத்தில் ஒளிதிருப்பம் ஏற்படும் போது அது சமதள ஆடியாகும்.

சமதளாடி சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடியாகும்.பேருந்து போன்ற வாகனங்களில் பின்னால் வரும் வண்டிகளைக் காட்ட குவியாடி பயன்படுகிறது.குழியாடி உரு பெருக்கம் தேவைப்படும் இடங்களில் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவியாடி&oldid=3078891" இலிருந்து மீள்விக்கப்பட்டது