குவோ கான்
குவோ கான் (எளிய சீனம்: 郭侃; மரபுவழிச் சீனம்: 郭侃; பின்யின்: குவோ கான், கி. பி. 1217–1277) என்பவர் ஆன் சீன வழிவந்த ஒரு பிரபலமான தளபதி ஆவார். இவர் மங்கோலிய கான்களிடம், அவர்கள் மேற்கு பகுதி மற்றும் சீனாவை வென்ற போதிலும் கூட பணியாற்றினார். இவர் பரம்பரையான சீன தளபதிகளின் வழி வந்தவர் ஆவார். இவரது தந்தை மற்றும் தாத்தா ஆகிய இருவருமே கானிடம் பணியாற்றினார். அதேநேரத்தில் இவரது முன்னோரான குவோ சியி சீனாவின் தாங் அரசமரபில் பணியாற்றிய ஒரு பிரபலமான தளபதி ஆவார்.[1]
உசாத்துணை
தொகு- ↑ Prawdin, Michael. "The Mongol Empire".