கு கிளக்சு கிளான்

கு குளசு குளான் அல்லது குகுகு (Ku Klux Klan, அல்லது KKK) என்னும் பெயரால் அமெரிக்க வரலாற்றில் பல்வேறு இரகசியமான அமைப்புகள் அழைக்கப்பட்டன. இந்த பல அமைப்புகளும் வெள்ளை தனி முதன்மையுக்கு போராட்டம் செய்தன. இவ்வமைப்புகளின் உறுப்பினர்கள் வெள்ளை முகமூடிகளும் ஆடைகளும் அணிந்து வன்முறை செய்தன. ஆபிரிக்க அமெரிக்கர்கள், யூதர்கள், கத்தோலிக்கர்கள், வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள், மற்றும் பல்வேறு சிறுபான்மை மக்களுக்கு எதிராக தீவிரவாதமும் வன்முறையும் பயன்படுத்தியுள்ளது.

Ku Klux Klan
கூ க்ளக்ஸ் க்ளான்
KKK.svg
நடப்பில் உள்ளது
முதலாம் க்ளான்1865-1870கள்
இரண்டாம் க்ளான்1915-1944
மூன்றாம் க்ளான் 11945-இன்று
உறுப்பினர்கள்
முதலாம் க்ளான்550,000
இரண்டாம் க்ளான்4,000,000[1] (1924 உயர்வு)
மூன்றாம் க்ளான்18,000
அடையாளங்கள்
தொடங்கிய இடம்ஐக்கிய அமெரிக்க நாடுகள்
அரசியல் கொள்கைவெள்ளை இன தனி முதன்மை
அரசியல் நிலைதொலை வலது சாரி
1மூன்றாம் க்ளான் ஒரு ஒன்றியதாக அமைப்பு இல்லை; இவ்வமைப்பில் கிட்டத்தட்ட 179 கிளைகள் உள்ளன.

முதலாம் கூ க்ளக்ஸ் க்ளான் 1865இல் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் படையினர்களால் தொடங்கப்பட்டது. அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிந்துவிட்டு வெள்ளை இன தனி முதன்மையை மீட்டெடுக்கவேண்டும் என்று இவ்வமைப்பின் முக்கிய நோக்கம். 1871இல் இவ்வமைப்பு அமெரிக்க அரசால் அழிக்கப்பட்டது. 1915இல் முதலாம் உலகப் போர் முடிந்துவிட்டு இரண்டாம் கூ க்ளக்ஸ் க்ளான் தொடங்கப்பட்டது. சிலுவைகளை எரிந்து விட்டு தனக்கு எதிரான மக்களை கூ க்ளக்ஸ் க்ளான் பயமுருத்தும். 1920களில் கூகிளக்ஸ்கிளானின் செல்வாக்கு உயரத்தில் அமெரிக்க மக்களின் 15% இவ்வமைப்பில் உறுப்பினராக இருந்தனர். அமெரிக்காவின் தெற்கு பகுதியில் சிறப்பாக செல்வாக்கு அதிகமாக இருந்தது.

1930களில் "Great Depression" காலத்தில் கூக்ளக்ஸ்க்ளானின் செல்வாக்கு குறைந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மீண்டும் இவ்வமைப்பின் உறுப்பினர்கள் குறைந்தது.

தற்போது அமெரிக்க அரசு மதிப்பீட்டின் படி 5,000-8,000 மக்கள் அமெரிக்காவில் கூ க்ளக்ஸ் க்ளானில் உறுப்பினராக இருக்கின்றனர். அமெரிக்க அரசு இவ்வமைப்பின் பல கிளைகளை "வெறுக்குழுமம்" என்று குறிப்பிட்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. The Various Shady Lives Of The Ku Klux Klan - Time
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு_கிளக்சு_கிளான்&oldid=2239697" இருந்து மீள்விக்கப்பட்டது