கூகுள் லூனர் எக்சு பரிசு

(கூகிள் லூனர் எக்சு பரிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கூகிள் லூனர் எக்சு பரிசு என்பது ஒரு விண்வெளிப் போட்டி. இது கூகிளின் ஆதரவுடன் எக்சு பரிசு அறக்கட்டளையால் நடாத்தப்படுகிறது. இந்தப் போட்டி 2007 இல் அறிவிக்கப்பட்டது.[1][2][3]

போட்டி விதிமுறைகள்

தொகு

இந்தப் போட்டியில் அரச சாரா அமைப்புகள் நிலாவுக்கு விண்வெளிம் ஏவி, தரையிறங்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்க வேண்டும். அங்கிருந்து பூமிக்கு குறிப்பிட்ட சில நிகழ்ப்படங்களை அனுப்ப வேண்டும். நிலாவில் இறக்கப்படும் தானியங்கி அல்லது மனிதர்கள் குறைந்தது 500 மீட்டர்கள் அங்கு பயணிக்க வேண்டும்.

பரிசுத் தொகை

தொகு

மேற் குறிப்பிட்ட போல் வெற்றிகரமாக நிலாவில் ஒரு தானியங்கியை இறக்கி, பயணிக்கும் குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் பரிசு. இது தவிர 5 மில்லியன் இரண்டாம் பரிசும் உண்டு. 5 மில்லியன் மேலதிக பரிசுகளையும், சில இலக்குகளை அடைவதன் மூலம் பெறலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Overview". Google Lunar XPRIZE. Archived from the original on 3 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 18 பெப்பிரவரி 2016.
  2. "Deadline For $30 Million Google Lunar XPRIZE Extended To End of 2017". Google Lunar XPRIZE. Archived from the original on 10 July 2018. பார்க்கப்பட்ட நாள் 18 February 2016.
  3. "Israeli Google Lunar XPRIZE Team Is First to Sign Launch Agreement For Private Mission to the Moon on SpaceX Falcon 9". Google Lunar XPRIZE. Archived from the original on 4 September 2018. பார்க்கப்பட்ட நாள் 18 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_லூனர்_எக்சு_பரிசு&oldid=4172636" இலிருந்து மீள்விக்கப்பட்டது