கூகுள் குறு மொழி
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கூகுள் குறு மொழி (Google Apps Script) என்பது ஜாவாஸ்க்ரிப்ட்டை அடிப்படையாக வைத்து இயற்றப்பட்டதொரு குறுமொழியாகும். கூகுள் குழுமம் ஜிமெயில் (gmail), கூகுள் காலண்டர் (google calendar), கூகுள் டாக்ஸ் (google docs) போன்ற பல மென்பொருட்களை உருவாக்கி உள்ளது. இந்த மென்பொருட்களை இணைக்க, கூகுள் குறு மொழியைப் பயன்படுத்தலாம் என கூகுள் குழுமம் கூறுகின்றது.
உருவாக்குனர் | கூகுள் |
---|---|
தொடக்க வெளியீடு | 2009[1] |
மொழி | ஜாவாஸ்க்ரிப்ட் |
இயக்கு முறைமை | பல் இயங்குதளம்(cross-platform) |
உருவாக்க நிலை | நடைமுறையில் |
மென்பொருள் வகைமை | இணையப் பயன்பாட்டு அமைப்பு (Web application framework), படிவ நிரலாக்க மொழி |
இணையத்தளம் | script |
கூகுள் குறு மொழியின் நன்மைகள்
தொகு- இது ஜாவாஸ்க்ரிப்ட்டைப் போல இருப்பதால், கற்றுக் கொள்வது எளிது.
- இது கூகுளின் மென்பொருளான கூகுள் வெப் டூல்கிட் (Google Web Toolkit)-இல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- இதைக் கொண்டு, ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டிய சிறுசிறு மென் பொருளை எழுதிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- சின்னஞ்சிறு ஆளுகை வேலைகளைச் (administrative tasks) செய்ய கூகுள் குறு மொழியில் மென்பொருட்கள் (software) உருவாக்குவது எளிது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Meyer, David (August 20, 2009). "Google Apps Script gets green light". CNet இம் மூலத்தில் இருந்து 10 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120810230818/http://news.cnet.com/8301-1001_3-10314002-92.html. பார்த்த நாள்: 26 March 2011.