கூகுள் புக்மார்க்சு
கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் இணையவழிச் சேவை
கூகுள் புக்மார்க்சு (Google Bookmarks) கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் ஓர் இணையவழிச் சேவையாகும். இதை உலாவிகளின் உதவியுடன் குறிக்கப் பயன்படும் புத்தகக்குறிகளுடன் ஒப்பிடத்தேவையில்லை. இது அக்டோபர் 10, 2005 அன்று வெளியிடப்பட்டது. மேகக் கணிமையின் அடிப்படையில் இது செயல்படுகிறது. எந்தவொரு கணினியிலும் தனக்கு விருப்பமான வலைத்தளங்களை குறித்துக்கொடு வேறோர் கணினியில் திறந்து பயன்படுத்தலாம். கூகுள் மின்னஞ்சல் பயன்படுத்தும் பயனர்களுக்கு இவ்வசதி கிட்டும்.