கூகுள் விட்சு

கூகுள் விட்ஸ் (Google Vids) என்பது கூகுள் ஒர்க்ஸ்பேஸ் தொகுப்பின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்ட ஒரு இணைய நிகழ்படத்தினை உருவாக்கும் செயலியாகும். வேலை தொடர்பான நோக்கங்களுக்காக தகவல் தரவு நிகழ்படங்களை உருவாக்க பயனர்களுக்கு உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயன்பாடு கூகிளின் ஜெமினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயனர்கள் கைமுறையாக அல்லது செயற்கை அறி திறன் உதவியுடன் எளிய அறிவுறுத்தல்களைப் பயன்படுத்தி நிகழ்படல்க் கதைச்சித்திரப் பலகையினை உருவாக்க உதவுகிறது. இதில் ஊடகங்களைப் பதிவேற்றுதல், படங்கள், பின்னணி இசை மற்றும் செயற்கை அறி திறனைப் பயன்படுத்தி வரிவடிவ உருவாக்கத்துடன் குரல் பரிமாற்ற அம்சம் ஆகியவை இதில் உள்ள வசதிகளாகும்.[1]

கூகுள் விட்சு
உருவாக்குனர்கூகுள்
தொடக்க வெளியீடுஏப்ரல் 9, 2024; 8 மாதங்கள் முன்னர் (2024-04-09)
தளம்வலைச் செயலி
மென்பொருள் வகைமைகூட்டு மென்பொருள்
வலைக் கருத்தாய்வு
இணையத்தளம்workspace.google.com/products/vids/

இந்தப் பயன்பாடு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட கூகுள் பணியிட ஆய்வகப் பயனர்களுடன் சோதனையில் உள்ளது, மேலும் 2024 கோடையில் ஒரு பொது பீட்டா பதிப்பினை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.[1] கூகுள் விட்ஸ் முதன்மையாக விற்பனை பயிற்சி, உள்நுழைவு நிகழ்படங்கள், விற்பனையாளர் அணுகல் மற்றும் திட்டப் புதுப்பிப்புகள் போன்ற வேலை தொடர்பான உள்ளடக்கத்தை உருவாக்குவதற்காக உள்ளது. இது பல்வேறு பாணிகள் மற்றும் வார்ப்புருக்கள், கூட்டு அம்சங்களை வழங்குகிறது, மேலும் தற்போது யூடியூப் ஒருங்கிணைப்பு இல்லாமல் மூன்று நிமிடங்களுக்குள் வீடியோக்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.

கூகுள் விட்ஸ் ஏப்ரல் 9,2024 -இல் அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Pierce, David (2024-04-09). "With Vids, Google thinks it has the next big productivity tool for work". The Verge (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-14.Pierce, David (2024-04-09). "With Vids, Google thinks it has the next big productivity tool for work". The Verge. Retrieved 2024-04-14.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_விட்சு&oldid=4160060" இலிருந்து மீள்விக்கப்பட்டது