கூடல் (அகுதை கூடல்)
சங்ககாலத்தில் கூடல் என்றாலே மதுரையைத்தான் குறிக்கும்.
என்றாலும் அகுதை என்னும் வேளிர்குடித் தலைவன் இருந்துகொண்டு ஆண்ட கூடல் மதுரையாக இருக்காது எனக் கொள்ளவேண்டியுள்ளது.
அகுதை கூடல் நகர அரசன். (இவனது கூடல் வைகைஅணைக்கு அருகே உள்ள கூடலூர் என்பது அறிஞர் முடிபு. நான்மாடக் கூடலாகிய மதுரை அன்று.) புலிமான் கோம்பை சங்ககால கல்வெட்டு குறிப்பிடும் கூடல், ஆகுதை மன்னனது கூடலே என்று ஆய்வுகள் கூறுகின்றன.வராகநதி வைகையோடு கூ டும் இடத்தில் உள்ள குள்ளப்புரமே 'கூடல்' என்று பாண்டியர்கால கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது.[1][2]