கூடுதல் புள்ளி

கூடுதல் புள்ளி அல்லது கூடுதல் மதிப்பெண்கள் (Extra credit) என்பது மதிப்பெண்களைப் பெறுவதற்கான ஒரு வழியாகும், குறிப்பாக பள்ளிகளில் இது பயன்படுத்தப்படுகிறது.[1]

கூடுதல் புள்ளிகளுக்கான காரணங்கள்

தொகு

பல்வேறு காரணங்களுக்காக ஆசிரியர்கள் கூடுதல் புள்ளிகளைப் பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, அதிக திறன் கொண்ட மாணவர்கள் கூடுதல் சவாலில் இருந்து பயனடையலாம் என்று கருதலாம், ஆனால் அது அனைத்து மாணவர்களுக்கும் தேவையான ஒன்றாக இருக்காது. படிப்பில் பலவீனமான செயல்திறனுக்குப் பிறகு ஒரு மாணவர் தனது தரத்தை மேம்படுத்த அனுமதிக்கும் ஒரு வழியாக கூடுதல் புள்ளிகள் பயன்படுத்தப்படலாம்.

கணக்கீட்டு முறை

தொகு

பொதுவாக, கூடுதல் புள்ளி வழங்குவது ஒருவரின் தரத்தை மட்டுமே மேம்படுத்தும். ஏற்கனவே உள்ள செயல்பாட்டில் புள்ளிகள் சேர்க்கப்படலாம், எடுத்துக்காட்டாக, இருக்கும் கேள்விகளிலேயே மிகவும் கடினமான கேள்விக்கு பதில் அளிக்கும் போது கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும். விருப்பச் செயல்பாடுகள் ஒட்டுமொத்த தரக் கணக்கீட்டில் பயன்படுத்தப்படும் புள்ளிகள் அல்லது மதிப்பெண்களைச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, ஒட்டுமொத்த சதவீதத்தை கணக்கிடுவதில் பயன்படுத்தப்படும் பின்னத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

சர்ச்சைக்குரிய அம்சங்கள்

தொகு

ஆசிரியர் சூலியா ஜி. தாம்சன் கூடுதல் புள்ளிகளை "ஆசிரியர்களுக்கான சர்ச்சைக்குரிய தலைப்பு" என்று குறிப்பிடுகிறார்.[2] கலிபோர்னியாவில், 2006 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், வளங்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் முயற்சியில் பாடப் புத்தகங்களை வாங்கிய மாணவர்களுக்கெல்லாம் கூடுதல் புள்ளிகள் வழங்கப்பட்டபோது சர்ச்சையானது.[3]

சான்றுகள்

தொகு
  1. Lucas, Sandra Goss; Bernstein, Douglas A. (2004), Teaching Psychology, p. 36
  2. Julia G. Thompson, "Extra Credit Dilemmas and Solutions," The First-year Teacher's Survival Guide: Ready-to-use Strategies, Tools & Activities for Meeting the Challenges of Each School Day (Wiley_Default, 2007), 279.
  3. "For credit, students go buy the book", Shirley Dang, Contra Costa Times, 3 November 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடுதல்_புள்ளி&oldid=3958731" இலிருந்து மீள்விக்கப்பட்டது