கூடு விட்டு கூடு பாய்தல்

கூடு விட்டு கூடு பாய்தல் என்பது ஒரு உடலினைவிட்டு மறு உடலுக்கு தனது உயிரினை கொண்டு செலுத்தும் கலையாகும். இக்கலைக்கு பரகாயா பிரவேசம் என்ற மற்றொரு பெயருமுண்டு. இதனை சித்தர்கள் அறிந்திருந்தனர் என்றும், திருமூலர் போன்ற சித்தர்கள் இக்கலையை பயன்படுத்தினர் என்றும் சித்தரியல் நூல்கள் தெரிவிக்கின்றனர்.

திருமூலர் தொகு

கூடுவிட்டு கூடு பாய்தல் கலை அறிந்தவரான திருமூலர் தன்னுடைய வாழ்வில் மூன்று முறை இக்கலையை பயன்படுத்தி வேறு உடலுக்குள் தன்னுடைய உயிரைச் செலுத்தியதாக திருமூலர் வரலாறு கூறுகிறது.

  • இக்கலையை அறிந்திருந்த சுந்தரன் எனும் சித்தர் வான்வழி பயணத்தில் ஈடுபட்டிருந்த பொழுது, மூலன் என்ற இடையர் இறந்து கிடப்பதையும், அவரைச் சுற்றி பசுக்கள் பிரிவு தாளமல் இருப்பதையும் கண்டார். பசுக்களின் துயர் தீர்க்க இறந்த மூலன் உடலில் குடிபுகுந்தார். [1]
  • வீரசேனன் எனும் பாண்டிய மன்னன் இறந்ததை அறிந்து துயருற்றிருந்த மகாராணியாரின் துயர் தீர்க்க மூலன் உடலை விட்டு வீரசேனன் உடலில் தன்னுயிரை செலுத்தினார்..
  • பிராணயாமப் பயிற்சியில் ஈடுபட்டு உயிர்நீத்த ஜம்புகேஸ்வரன் என்ற இளைஞன் உடலில் வீரசேனன் உடலிருந்து கூடுவிட்டு கூடு பாய்ந்தார். [2]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-06-10 அன்று பார்க்கப்பட்டது.
  2. சித்தமெல்லாம் சிவமயம் உமா சம்பத் வரம் பதிப்பகம் வெளியீடு

வெளி இணைப்புகள் தொகு