கூட்டு

உணவு பதார்த்தம்

அறுசுவையான உணவில் கூட்டு என அழைக்கப்படும் காய்கறிகளும் பருப்பும் சேர்ந்து சமைக்கப்படும் உணவு பதார்த்தர்த்திற்கு சிறப்பான இடமுண்டு. இது மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், குழம்பு போல தண்ணீராகவும் இல்லாமல் இடைப்பட்ட பதத்தில் சமைக்கப்படும் பண்டமாகும். சாப்பிடப்பழகும் குழந்தைகள் முதல் ஜீரணமாக கஷ்டப்படும் வயதானோர் வரை எந்த வயதிலுள்ளோரும் சாப்பிடக்கூடிய அருமையான பதார்த்தமாகும்.[1]

கூட்டு
வகைStew
தொடங்கிய இடம்இந்தியா
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக
முக்கிய சேர்பொருட்கள்காய்கறிகள், பருப்புகள்

கூட்டுடன் சாதம் என்பது ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. காய், பருப்பு, தேங்காய், உப்பு, காரம் என்று எல்லாம் கலந்த கலவையில் கூட்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் எண்ணெய் குறைவாக உபயோகிப்பதால் உடலுக்கும் தீங்கு விளைவிக்காது. செய்வதற்கும் மிகவும் எளிதானது. கூட்டிற்கு பூசணி, புடலங்காய், பீர்க்கங்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், கோஸ், வெள்ளரிக்காய், மற்றும் கத்திரிக்காய் போன்ற பல காய்கள் பயன்படுத்தப் படுகின்றன. இரண்டு காய்களை சேர்த்தும் கூட கூட்டுகள் செய்வதுண்டு…

விருந்து சாப்பாடு என அழைக்கபடும் உணவில் வேக வைத்த சாதம் (சோறு), சாம்பார், ரசம், அவியல், பொரியல், அப்பளம், தயிர், பாயாசம் மற்றும் ஊறுகாய் போன்றவற்றுடன் கூட்டும் இருந்தால் தான் அந்த விருந்தே முழுமையடையும்.

எல்லா வகையான கூட்டுகளும் ஏதாவது ஒரு காய்கறியும் ஒரு பருப்பும் சேர்ந்தே சமைக்கப்படுவதாகும். கூட்டு பெரும்பாலும்

  • பொரிச்ச கூட்டு
  • அரைத்து விட்ட கூட்டு என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மூலப்பொருட்கள் இரண்டு வகையிலும் காய்கறி மற்றும் பருப்புதான்

பொரிச்ச கூட்டு

தொகு

எந்த மூலப்பொருளையும் அரைக்காமல் அப்படியே வேகவைத்து சமைப்பது பொரிச்ச கூட்டு என்று அழைக்கப்படுகிறது. பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகளும் வறுத்த வெள்ளை உளுந்து மற்றும், மிளகு, காய்ந்த மிளகாய் வத்தல், தேங்காய் போன்றவைகளே இத்தகைய கூட்டு செய்ய தேவையான அடிப்படை பொருட்களாகும்.


மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டு&oldid=3893601" இலிருந்து மீள்விக்கப்பட்டது