கூட்டு வழிபாடு

கூட்டு வழிபாடு என்பது ஒரே நோக்கத்திற்காக மக்கள் ஓரிடத்தில் கூடி இறையை வேண்டுவதாகும். இவ்வழிபாடானது மக்களின் பொது நோக்கங்களான மழை வேண்டுதல் [1], உலக மக்களின் நலம் வேண்டுதல் ][2] என்பதைப் போன்று பொதுமையாகவோ, தனி நபர்களின் உடல் நலம் வேண்டியோ இருக்கலாம். பிரபலங்களின் உடல் நலத்திற்காக அவர்களின் ரசிகர்களும், நலம் விரும்பிகளும் இவ்வாறான கூட்டுப் பிரார்த்தனைகளில் ஈடுபடுகிறார்கள். குடும்ப உறுப்பினர்களுக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டி அவர்களின் உறவினர்கள், கூட்டுப் பிரார்த்தனைக்கென இருக்கும் குழுக்களை வலியுறுத்தியும் இவ்வழிபாட்டினைச் செய்கிறார்கள்.

இவ்வழிபாட்டு முறைகளில் அமைதியாக இறையை வேண்டுதலும், இசையோடு கூடிய பாடலை ஒன்றாகப் பாடியும் மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் நினைவு நாளில் கோயில்களில் அரசின் மூலமாக கூட்டு வழிபாடு ஏற்பாடு செய்யப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. [http://thinamalar.net/district_detail.asp?id=542629[தொடர்பிழந்த இணைப்பு] தூத்துக்குடி பெருமாள் கோயிலில் மழைவேண்டி ஆழிமழை கண்ணா பாடல் பாடி கூட்டு வழிபாடு தினமலர் 07 செப் 2012
  2. "ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சகஸ்ர தீப கூட்டு வழிபாடு உலக நன்மை வேண்டி தினகரன் 2013-12-07". Archived from the original on 2013-12-10. பார்க்கப்பட்ட நாள் 2014-05-16.
  3. அண்ணா நினைவு நாளையொட்டி 11 கோவில்களில் சிறப்பு கூட்டு வழிபாடு–பொது விருந்து அதியமான்கோட்டையில் கலெக்டர் பங்கேற்பு - தினத்தந்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டு_வழிபாடு&oldid=3830665" இலிருந்து மீள்விக்கப்பட்டது