கூட்ட அறிக்கை

கூட்ட அறிக்கை (Minutes), கூட்ட அறிக்கை என்பது ஒரு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விபரங்களின் குறிப்பு ஆகும். பொதுவாக இவை கூட்டத்தின் நிகழ்வுகளை விவரிக்கின்றன மற்றும் பங்கேற்பாளர்களின் பட்டியல், பங்கேற்பாளர்களால் விவாதிக்கப்பட்ட செயல்பாடுகளின் அறிக்கை மற்றும் தொடர்புடைய பதில்கள் அல்லது நடவடிக்கைகளுக்கான முடிவுகள் ஆகியவை அடங்கும்.

ஹாக்ஸ் பே பூகம்ப நிவாரண நிதிக் குழுவின் முதல் கூட்டத்தின் கூட்ட அறிக்கை

சொற்பிறப்பியல்

தொகு

"மினிட்ஸ்" என்ற சொல் லத்தீன் சொற்றொடரான மினுடா ஸ்கிரிப்டுரா (அதாவது "சிறிய எழுத்து") "தோராயமான குறிப்புகள்" என்று பொருள்படும் சொல்லில் இருந்து பெறப்பட்டிருக்கலாம். [1]

உருவாக்கம்

தொகு

கூட்டத்தின் முடிவில் தட்டச்சு செய்பவர் அல்லது நீதிமன்றத்தில் குறிப்பு எடுப்பவர் மூலம் கூட்ட அறிக்கைகள் உருவாக்கப்படலாம், அவர் சுருக்கெழுத்து குறியீட்டைப் பயன்படுத்தி கூட்ட அறிக்கையைத் தயாரித்து பங்கேற்பாளர்களுக்கு வழங்கலாம். மாற்றாக, கூட்டத்தை குறல் பதிவு அல்லது காட்சிப் பதிவு செய்யலாம். மேலும் குழுவின் நியமிக்கப்பட்ட அல்லது முறைசாரா முறையில் நியமிக்கப்பட்ட செயலர் குறிப்பு எடுத்து பின்னர் கூட்ட அறிக்கை தயாரிக்கலாம். அதிகமான அரசு நிறுவனங்கள் நிகழ்நேரத்தில் கூட்ட அறிக்கையைத் பதிவுசெய்து தயார் செய்ய கூட்ட அறிக்கைப் பதிவு மென்பொருளைப் பயன்படுத்துகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Minutes". பார்க்கப்பட்ட நாள் 15 June 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்ட_அறிக்கை&oldid=3902853" இலிருந்து மீள்விக்கப்பட்டது