கூத்தபிரான் (நாடகக் கலைஞர்)

கூத்தபிரான் (பிறப்பு 00 ஆகஸ்ட் 1932 - இறப்பு: 23 டிசம்பர் 2014) தமிழகத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞரும், வானொலிக் கலைஞரும் ஆவார். அவரது இயற் பெயர் நாகப்பட்டினம் விட்டல் ஐயர் நடராஜன் என்பதாகும். சிதம்பரத்தில் பிறந்தபடியால் அவரது மனைவி லலிதாவின் சிபாரிசுவின்படி கூத்தபிரான் என்ற புனைபெயரை வைத்துக்கொண்டார் [1]

நாடகத்துறை பங்களிப்புகள்தொகு

இவர் 6500 முறை மேடை நாடகங்களில் நடித்தவர். மேடை நாடகங்களுக்குரிய கதைகளையும் வடிவமைத்தவர்.[1]

நூலாசிரியராகதொகு

குழந்தைகளுக்காக 20க்கும் மேற்பட்ட நூல்களையும், புதினங்களையும், நாடகங்களையும் எழுதினார்.[1]

வானொலித்துறை பங்களிப்புகள்தொகு

அகில இந்திய வானொலியின் சென்னை நிலையத்தில் ஒரு அறிவிப்பாளராக 1960 ஆம் ஆண்டு சேர்ந்த கூத்தபிரான், சிறிது காலத்திற்குப்பின் குழந்தைகளுக்கான நிகழ்ச்சித் தயாரிப்பில் உதவியாளராக பணியாற்றினார். அப்போது ஆர். ஐயாசாமி என்பவர் ரேடியோ அண்ணாவாக இருந்தார். ஐயாசாமிக்கு அடுத்ததாக பொறுப்பேற்ற கூத்தபிரான், ஏறத்தாழ 30 ஆண்டு காலத்திற்கு வானொலி அண்ணாவாக 'சிறுவர் சோலை' நிகழ்ச்சியினை நடத்தினார்.[1]

துடுப்பாட்டங்களின் தமிழ் நேர்முக வர்ணனையாளர்களில் குறிப்பிடத்தக்கவராக கூத்தபிரான் சென்னை அகில இந்திய வானொலியில் பணியாற்றினார்.[1]

இறப்புதொகு

கூத்தபிரான் 2014 டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை ஹைதராபாத்தில் காலமானார்.[2]

மேற்கோள்கள்தொகு