கூத்தரங்கம் (இதழ்)
கூத்தரங்கம் யாழ்ப்பாணத்தில் இயங்கும் செயற்திறன் அரங்க இயக்கத்தினரால் (Active Theatre Movement) வெளியிடப்படும் சஞ்சிகையாகும் (இதழாகும்). இது மார்ச் 2004 இலிருந்து வெளிவருகின்றது. இதன் ஆசிரியர்களாக தே. தேவானந், அ. விஜயநாதன் ஆகியோர் பணியாற்றுகின்றனர். அரங்கச் செயற்பாடுகள் தொடர்பான கட்டுரைகள், நேர்காணல்கள் என்பவற்றோடு நாடகப் பிரதிகளும் வெளியிடப்படுகின்றன. கடந்தகால அரங்கச் செயற்பாடுகள் தொடர்பான பதிவுகளும் ஆவணப்படுத்தப் படுகின்றன. கூத்தரங்கத்தின் (சிறப்பு) விசேட அளிக்கையாக சிறுவர் அரங்கு எனும் சிறப்பிதழ் முழுக்க முழுக்க சிறுவர் அரங்கு தொடர்பாக வெளிவந்துள்ளது.