கூனாண்டியூர்
கூனாண்டியூர் என்பது ஓர் ஊராட்சி. இது சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும், மேச்சேரியில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமம் இரண்டு பக்கம் (மேட்டூர் அணை நீர் தேக்க) நீராலும், இரண்டு பக்கம் மலையாலும் சூழப்பட்டுள்ளது. மேலும் இயற்கை அழகு நிரம்பப்பட்டுள்ளது. காவிரி நீர் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் இருந்து மேட்டூர் அணையில் கலக்கும் இடம் கூனாண்டியூர். இது சேலம் மாவட்டத்தின் கடைக்கோடி ஊராட்சி. இங்கு மீன் பிடித்தல் முக்கிய தொழில் ஆகும். கூனாண்டியூர் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் மேட்டூர் அணை மீன்.