கூமி நரிமன் வாடியா

இசைக்குழு இயக்குநர்

கூமி நரிமன் வாடியா (Coomi Nariman Wadia) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இசைக்குழு இயக்குநர் ஆவார்.[1][2] 1933 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஆறாம் தேதியன்று இவர் பிறந்தார்.

கூமி நரிமன் வாடியா
பிறப்பு6 ஆகத்து 1933 (1933-08-06) (அகவை 91)
விருதுகள்பத்மசிறீ
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் கூமி நரிமன் வாடியா பத்மசிறீ விருது பெறுகிறார்.

வாழ்க்கை

தொகு

மும்பையிலுள்ள சர் இயம்செட்ச்சி சிச்சிபாய் கலைப் பள்ளியில் பயின்ற பின்னர் இலண்டன் நகரத்திலுள்ள டிரினிட்டி இசைப்பள்லியில் இரண்டு பட்டயங்களை கூமி நரிமன் வாடியா பெற்றார்.[3]

விக்டர் பரஞ்சோதியால் உருவாக்கப்பட்ட பரஞ்சோதி சேர்ந்திசை அகாடமியில் ஓர் உச்சக்குரலிசைப் பாடகராகச் சேர்ந்தார். பரஞ்சோதி இல்லாத நாட்களில் அவர் வேடத்தையேற்று இசைக்குழுவின் இயக்குநராக செயல்படுவார். 1964 ஆம் ஆண்டில் பரஞ்சோதி இறந்தவுடன் அந்த இசைக்குழுவுக்கு இவர் இயக்குநரானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "A chorus of celebration" (in en-IN). The Hindu. 2017-11-27. https://www.thehindu.com/entertainment/music/a-chorus-of-celebration/article21007211.ece. 
  2. "Coomi Wadia can go from a Goan folk song to a tango to song from the Vedas with equal flair". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-01-28. பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.
  3. "Padma Shri - Coomi Nariman Wadia" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூமி_நரிமன்_வாடியா&oldid=3922457" இலிருந்து மீள்விக்கப்பட்டது