கூறிட்டு கதிர்மருத்துவம்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கூறிட்டு கதிர்மருத்துவம் (Fractionated RT ) என்பது, கதிர்மருத்துவம் ஒரு முழுமையான மருத்துவ அறிவியல் பகுதியாக நிலைபெற்ற போது 6 வாரத்திற்கு, வாரம் 5 நாட்கள் வீதம் தினமும் 2 கிரே அளவில் மொத்தம் 60 கிரே 42 நாட்களில், 30 கூறுகளாக ,மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது. இது பொதுவாக எல்லா மருத்துவ மனைகளிலும் நடைமுறையில் உள்ளது. இதுவே கூறிட்டு கதிர்மருத்துவம் மேற்கொள்ளும் முறையாகும். சில சமயங்களில் ஆய்விற்காக ஒரே நாளில் 2 அல்லது 3 கூறுகளாக மருத்துவம் மேற் கொள்ளப்படுகிறது. இது அதிகரித்த கூறுகளுடன் கதிர்மருத்துவம். (Hyperfractionated RT ) எனப்படும். அதுபோல் வாரத்திற்கு 5 கூறுகளுக்குப் பதில் 6 கூறுகளுடன் மருத்துவம் செய்யப்படும் போது அது விரைந்த கதிர் மருத்துவம் (Accelerated RT ) எனப்படுகிறது. அது மேலும் வரிவுபடுத்தி, இடைவெளி இல்லாமல் தொடர்ந்து ஒரு வாரத்தில் 7 நாட்களும் மருத்துவம் கொடுக்கும் போது அது தொடர் கதிர்மருத்துவம் (Continuous RT ) எனப்பட்டது. இம்முறைகள் அனைத்தும் இணைத்து மருத்துவம் மேற்கொள்ளும் போது அம்முறை 'சார்ட்' (CHART_ continuous hyperfractionated accelerated RT ) எனப்படுகிறது. இம்முறைகள் எல்லா மருத்துவ மனைகளிலும் பின்பற்றப்படுவதில்லை. வசதியைப் பொறுத்தும் ஆய்விற்காகவும் மேற்கொள்ளப்படுகிறன..