கூற்றங் குமரனார்

கூற்றங் குமரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர், அவரது பாடல் ஒன்றே ஒன்று நற்றிணை 244 எண்ணுள்ள பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

தோழி தலைவியின் நிலையைத் தாய்க்கு அறத்தொடு நின்று எடுத்துரைக்கத் தலைவி ஒப்புதல் தரும் பாடல் இது.

பாடல் சொல்லும் செய்தி தொகு

அசுணம் வண்டிசையில் மயங்கித் திளைக்கும் நாட்டை உடையவன் தலைவன். தலைவி தோழியிடம் சொல்கிறாள்

செயலைத் தளிர்(அசோகந்தளிர்) போன்ற என் மாமை அழகு மாறிப் பசலைநிறம் படர்ந்துள்ளது. இதனைத் தலைவனுக்குச் சொல். அல்லது முருகு அயர முயலும் அன்னைக்கு உண்மையை எடுத்துச் சொல். இந்த இரண்டில் ஒன்றையும் செய்யாமல் இருக்கும் நீ கொடியை என்று தோழியைத் தலைவி தாக்கி எடுத்துரைக்கிறாள்.

அசுணம் தொகு

மாரிக்கால முடிவில் கூதளம் பூ பூக்கும் கூதிர் காலத்தில் பூ மணத்தால் தேனிருக்கும் இடத்தை அறிந்த வண்டினம் பாடிக்கொண்டே செல்லும். அந்தப் பாடலின் இசையில் மயங்கி அசுணம் என்னும் விலங்கு கேட்டு மகிழும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூற்றங்_குமரனார்&oldid=2718014" இலிருந்து மீள்விக்கப்பட்டது