கூளியர்
கூளியர் என்போர் பேய்கள் அன்று. குரங்கு போல் குள்ளமான மக்கள். துறையூர் ஓடைகிழார் - புறநானூறு 136
'மரம் பிறங்கிய நளிச் சிலம்பில், குரங்கு அன்ன புன் குறுங் கூளியர், பரந்து அலைக்கும் பகை' என்னும் பாடல் தொடர் கூளியர் யார் என்பதை விளங்கிக்கொள்ளப் போதுமானதாக உள்ளது. மரமடர்ந்த காடுகளில் கூளியர் வாழ்ந்தனர். அவர்கள் குரங்கு போல் குள்ளமானவர்கள். வழிப்போக்கர் கொண்டுசெல்லும் பொருள்களை அவர்கள் கவர்ந்துகொள்வர்.