கூவன்மைந்தன்

கூவன்மைந்தன் (கூவல் மைந்தன்) சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 224 எண்ணில் உள்ள ஒரே ஒரு பாடல் இவரால் பாடப்பட்டதாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளது.

பாடல் சொல்லும் செய்தி தொகு

  • திணை - பாலை
வழிகள் பலவாகப் பிரியும் காட்டுவழியில் அவர் செல்கிறார் என்று சொல்கிறாய். அதனால் நான் படும் வேதனையைச் சொல்லமுடியாமல் அந்த ஊமையனைப் போலத் துடிக்கிறேன் - தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.

உவமை தொகு

  • குரால் = செவலை மாடு
  • கூவல் = பயன்படுத்தாத நீர் தேங்கியுள்ள கிணறு

நள்ளிரவில் குரால் பசு ஒன்று கூவல் கிணற்றில் விழுந்துவிட்டது. அதனை ஊமையன் ஒருவன் பார்த்தான். அவன் என்ன செய்யமுடியும்? அதுபோலத் தலைவியின் தவிப்பு உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூவன்மைந்தன்&oldid=2718013" இலிருந்து மீள்விக்கப்பட்டது