கெச்வா மொழிகள்
கெச்வா (ஆங்கிலம்: Quech·ua (kéchwə) (பன்மை: கெச்வா Quech·ua அல்லது கெச்வாக்கள் Quech·uas) அல்லது கெச்சுவா Kech·ua (kéchwə)) அமெரிக்கா முதற்குடிமக்கள் மொழிகளில் பெரும்பாலான மக்களால் பேசப்படும் மொழிகள் ஆகும். சுமார் 6 - 8 மில்லியன் மக்கள் இந்த மொழிகளைப் பேசுகிறார்கள். கெச்சுவா மொழிக் குடும்பத்தில் பல்வேறு தனி மொழிகளும் வட்டார வழக்குகளும் காணப்படுகின்றன. பண்டைய இன்கா நாகரிகத்தின் மொழியான இது, இன்று பொலிவியா, பெரு, எக்குவடோர் ஆகிய நாடுகளில் அதிகாரபூர்வ அலுவல் மொழிகளில் ஒன்றும் ஆகும். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களை கொண்டே எழுதப்படுகிறது.