கெண்டிகை
கெண்டிகை (Kindi) என்பது கேரளத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ள பழைய வீடுகளில் பொதுவாகக் காணப்படும் ஒரு பாத்திரம்.
கெண்டிகையின் ஆரம்பகால எடுத்துக்காட்டுகள் முதலில் தெற்காசியாவின் சாவல்தா நாகரீக கால கலாச்சாரங்களில், முதன்முறையாக தொன்றின. குறிப்பாக சவால்தா நாகரீகம் கலாச்சாரத்தில், மற்றும் கி.மு. 2 மில்லினியம் வரையிலான ஜோர்வே கலாச்சார மட்பாண்டங்களிலிருந்து நன்கு பாதுகாக்கப்பட்ட இரண்டு எடுத்துக்காட்டுகலும் காணப்படுகின்றன. [1]
பொதுவாக வெண்கலத்தால் இது செய்யபட்டிருக்கும். இது பொதுவாக பூஜையின் போது தீர்த்தத்தை கொடுக்க பயன்படுகிறது. வீட்டின் நுழைவாயிலில் தண்ணீரை வைத்திருக்கவும், வீட்டுக்கு வருபவர்கள் இந்த தண்ணீரில் கால்களைக் கழுவவும், உணவு உண்டபிறகு கைகளைக் கழுவவும் கெண்டிகை பயன்படுத்தப்படுகிறது.
கெண்டிகையின் வடிவம் கால்களையும், கைகளையும் கழுவுகையில் நீர் வீணாவதை தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இதிலிருந்து தண்ணீரை ஊற்ற ஒரு சிறிய துளை மட்டுமே உள்ளது. இதன் வடிவமும் மிகவும் கவர்ச்சியானது. கெண்டிகேயைப் பயன்படுத்தும் போது, பயனரின் கைகள் கெண்டிகையின் உள்ளே இருக்கும் தண்ணீரில் படாது. இதனால் தண்ணீர் மாசுபடாது.
குறிப்புகள்
தொகு- ↑ "Excavations - Important - Maharashtra". Archaeological Survey of India. Archived from the original on 2011-10-11. பார்க்கப்பட்ட நாள் 1 September 2010.