கென்னடி தோற்றப்பாடு
குண்டுபட்ட காயங்களுக்கு (gunshot wound) மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் போது காயத்தின் அமைப்பு மாற வாய்ப்பு இருக்கிறது. இது தடையயியல் வல்லுநர்கள் காயத்தை ஆராயும் போது குழப்பத்தை உண்டு செய்யும். குறிப்பாக குண்டு நுழைந்த இடம் (entrance wound) எது வெளியேறிய இடம் (exit wound) எது என்ற பெருங்குழப்பத்தை உண்டாக்கி விடும். இத்தகைய பிசகு (artefact) முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜான் கென்னடி குண்டடிபட்டு இறந்த போது ஏற்பட்டது. ஆகவே இப் பிசகு அவர் பெயராலேயே கென்னடி தோற்றப்பாடு (Kennedy phenomenon) என அழைக்கப்படுகிறது.