கென்யாவில் 8-4-4 கலைத்திட்டம்

கென்யாவில் 8-4-4 கலைத்திட்டம் (8-4-4 Curriculum in Kenya) முன்னாள் கென்ய குடியரசுத்தலைவர் டேனியல் அராப் மோய் அவர்களால் 1985 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் எட்டாண்டுகள் தொடக்கக் கல்வியும், அடுத்த நான்கு ஆண்டுகள் இடைநிலைக் கல்வியும் கடைசி நான்கு ஆண்டுகள் பல்கலைக்கழகக் கல்வியும் கொண்ட ஒரு கல்வித்திட்டமாக இக்கலைத்திட்டம் உருவாக்கப்பட்டது. இக்கலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்ட பின்னர் கென்யாவில் தொடக்கக் கல்வியானது கென்ய தொடக்கக்கல்வி சான்றிதழ் கல்வி என்ற பெயரிலும், கென்ய சான்றிதழ் கல்வியானது கென்ய இடைநிலைச் சான்றிதழ் கல்வி என்ற பெயரிலும் மாற்றமடைந்தது. 1985 ஆம் ஆண்டு முதல் கென்யா நாட்டில் 8-4-4[1][2] என்ற கலைத்திட்டத்தில் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள் தொகு