கெம்பெ கவுடா
தமிழ்நாட்டின் காஞ்சிபுத்துக்கு அருகில் மணமஞ்சி புத்தூர் என்ற ஊர் - வன்னியகுல க்ஷத்ரியன்
இரிய கெம்பெ கவுடா (Hiriya Kempe Gowda) விஜயநகரப் பேரரசின் கீழ் ஆண்ட நிலக்கிழார் ஆவார். தற்போது கர்நாடக மாநிலத்தின் தலைநகராக விளங்கும் பெங்களூரு நகரத்தை நிறுவியவராக இவர் கருதப்படுகிறார்.[1]
கெம்பெ கவுடா I | |
---|---|
பிறப்பு | இரிய கெம்பெ கவுடா 1510 |
இறப்பு | 1569 |
மற்ற பெயர்கள் | பெங்களூரு கெம்பெ கவுடா, |
அறியப்படுவது | பெங்களூருவின் நிறுவனர் |
முன்னிருந்தவர் | கெம்பெநஞ்ச கவுடா |
பின்வந்தவர் | கிட்டெ கவுடா |
கெம்பெ கவுடா அவரது காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர்களில் நன்கு படித்தவராகவும் திறன்மிக்கவராகவும் விளங்கினார். கெம்பெநஞ்ச கவுடாவை அடுத்து பதவியேற்ற கெம்பெ கவுடாவின் வாரிசுகள் யெலயங்கா பிரபுக்கள் என அழைக்கப்பட்டனர். யெலயங்காவிலிருந்து இடம்பெயர்ந்து தற்போதைய பெங்களூரை வடிவமைத்து அங்கு குடியேறினர். பெங்களூரைச் சுற்றிலும் கோவில்களையும் ஏரிகளையும் அமைத்ததற்காக அறியப்படுகிறார். பெரும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002)