கெயிலீச்
கெயிலீச் (Cailleach) என்பது இசுகாட்டிஷ் புராணங்களில் ( ஐரிஷ், ஸ்காட்டிஷ் மற்றும் மேங்க்ஸ்) ஒரு தெய்வீக பெண்மணியாகவும் ஒரு படைப்பாளி தெய்வமாகவும், ஒரு வானிலை தெய்வமாகவும் மற்றும் ஒரு மூதாதையர் தெய்வமாகவும் கருதப்படுகிறார். நவீன இசுக்காட்லாந்து நாட்டுப்புற ஆய்வுகளில், இவர் குளிர்காலத்தின் ராணி பெய்ரா என்றும் அழைக்கப்படுகிறார். இந்த வார்த்தையின் அர்த்தம் "வயதான பெண், தேவதை" என்படும். நவீன ஐரிய மொழி மற்றும் இசுகாட்டிஷ் கேலிக் மொழிகளில் இந்த அர்த்தத்துடன் காணப்படுகிறது, இது அயர்லாந்து, இசுகாட்லாந்து மற்றும் மாண் தீவு ஆகியவற்றில் உள்ள பல புராண நபர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. [1]
பெயர்
தொகுகெய்லீச் என்பது நவீன ஐரிய மற்றும் இசுகாட்டிஷ் கேலிக் மொழிகளில் "வயதான பெண்" அல்லது "தேவதை" என்ற பொருள் தருகிறது. இது ஆரம்பகால கடன் என்றும் லத்தீன் பாலியத்திலிருந்து, [2] "கம்பளி ஆடை" என்றும் பொருள் தருகிறது. [3] [4] [5] [6]
புனைவுகள்
தொகுஇசுகாட்லாந்தில், இவர் பெய்ரா, குளிர்கால ராணி (20 ஆம் நூற்றாண்டின் நாட்டுப்புறவியலாளர் டொனால்ட் அலெக்சாண்டர் மெக்கன்சி வழங்கிய பெயர்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் முன்னேறிச் செல்லும்போது ஏராளமான பள்ளத்தாக்குகளை மற்றும் பெரிய மலைகளை கெய்லீச் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. நிலத்தின் குறுக்கே தற்செயலாக இவரது கூடையிலிருந்து பாறைகளின் விழுந்தது. மற்ற சந்தர்ப்பங்களில், இவர் தனக்கு மலையடிவாரங்கள் பணியாற்ற வேண்டுமென்றே மலைகளை கட்டிஎழுப்பியதாகக் கூறப்படுகிறது. இவர் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை வடிவமைப்பதற்காக ஒரு சுத்தியலைக் கொண்டு செல்கிறார், மேலும் அனைத்து தெய்வங்களுக்கும் இவர் தாய் என்றும் கூறப்படுகிறது. [7]
கெய்லீச் குளிர்காலத்தின் உருவத்திற்கு ஏற்ற பல பண்புகளைக் காட்டுகிறார். இவர் மான்களை வளர்க்கிறார். இவர் வசந்தத்தை எதிர்த்துப் போராடுகிறார். இவருடைய ஊழியர்கள் தரையை உறைய வைக்கிறார்கள். [8]
கொண்டாட்டம்
தொகுபிரிக்டே தெய்வத்துடன் கூட்டாக, கெயிலீச் ஒரு பருவகால தெய்வமாக அல்லது ஆவியாகக் காணப்படுகிறது. இது குளிர்கால மாதங்களை சாம்ஹைன் (நவம்பர் 1 அல்லது குளிர்காலத்தின் முதல் நாள்) மற்றும் பீல்டெய்ன் (மே 1 அல்லது கோடையின் முதல் நாள்) ஆகியவற்றுக்கு இடையில் ஆட்சி செய்கிறது. அதே நேரத்தில் பிரிக்டே கோடைகாலத்தை ஆட்சி செய்கிறது. சில விளக்கங்கள் ஒரே தெய்வத்தின் இரண்டு முகங்களாக கெய்லீச் மற்றும் ப்ராக்டே ஆகியவற்றைக் குறிக்கின்றன. மற்றவர்கள் கெயிலீச் பீல்டெயினில் கல்லாக மாறுவதாகவும், குளிர்கால மாதங்களில் ஆட்சி செய்வதற்கான நேரத்தில் சாம்ஹைனில் மனித உருவத்திற்கு திரும்புவதாகவும் விவரிக்கிறார்கள். உள்ளூர் காலநிலையைப் பொறுத்து, குளிர்கால தெய்வத்திற்கும் கோடை தெய்வத்திற்கும் இடையிலான அதிகார பரிமாற்றம் லா ஃபீல் பிரிக்டே (பிப்ரவரி 1) ஆரம்பத்தில் அனைத்து காலத்திலும் கொண்டாடப்பட்டது, லதா நா கைலிச் (மார்ச் 25), அல்லது பீல்டெய்ன் (மே 1) , மற்றும் வசந்த காலத்தின் முதல் அறிகுறிகளின் வருகையைக் குறிக்கும் உள்ளூர் திருவிழாக்களுக்கு கெயிலீச் அல்லது ப்ரூக்டே பெயரிடப்பட்டது.
கோரிவ்ரெக்கான் வளைகுடா
தொகுஇசுகாட்லாந்தின் மேற்கு கடற்கரையில், கெய்லீச் குளிர்காலத்தில் கோரிவ்ரெக்கான் வளைகுடாவில் தனது பெரிய ஆடைகளைக் கழுவுவதன் மூலம் ஆரம்பமாகிறது. இந்த செயல்முறை மூன்று நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது, அப்போது ஏற்படும் சூறாவளியின் ஒலி இருபது மைல் (32 கி.மீ) தொலைவில் கேட்கப்படுகிறது. இப்பணி முடிந்ததும் கெய்லீச்சின் ஆடை தூய வெள்ளை மற்றும் பனி நிலமாக கொண்டிருக்கும் .
குறிப்புகள்
தொகு- ↑ Briggs, Katharine (1976) An Encyclopedia of Fairies. New York, Pantheon Books. pp. 57-60.
- ↑ Displaying the expected /p/ > /c/ change of early Latin loans in Irish.
- ↑ Rudolph Thurneysen, A grammar of old Irish, Volume 1, Dublin Institute for Advanced Studies, 1946, p. 568.
- ↑ Ó Cathasaigh, T. 'The eponym of Cnogba', Éigse 23, 1989, pp. 27–38.
- ↑ Ó hÓgáin, D. Myth, legend & romance: an encyclopaedia of the Irish folk tradition, Prentice Hall Press, 1991, p. 67.
- ↑ Macbain, Alexander (1998) Etymological Dictionary Of Scottish-Gaelic. New York, Hippocrene Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7818-0632-1 p. 63.
- ↑ Mackenzie, Donald Alexander (1917). "Beira, Queen of Winter" in Wonder Tales from Scottish Myth and Legend".
- ↑ Briggs, K. M. (1967). The Fairies in English Tradition and Literature. University of Chicago Press. p. 40.
மேற்கோள்கள்
தொகு- Carmichael, Alexander (1992). Carmina Gadelica. Lindisfarne Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-940262-50-9
- Campbell, John Gregorson (1900, 1902, 2005) The Gaelic Otherworld. Edited by Ronald Black. Edinburgh, Birlinn Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84158-207-7
- Danaher, Kevin (1962). The Year in Ireland. Irish Books & Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-937702-13-7
- Hull, Eleanor (30 Sep 1927). "Legends and traditions of the Cailleach Bheara or Old Woman (Hag) of Beare". Folklore 38 (3): 225–54. doi:10.1080/0015587x.1927.9718387.
- MacKillop, James (1998). Dictionary of Celtic Mythology. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280120-1
- McNeill, F. Marian (1959). The Silver Bough, Vol. 1 -4. William MacLellan, Glasgow
- Monaghan, Patricia (2004). Encyclopedia of Celtic Myth and Folklore. New York: Facts on File. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-4524-0.
- Ó Crualaoich, Gearóid (2003). The Book of the Cailleach: Stories of the Wise-Woman Healer. Cork: Cork UP. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85918-372-7.
- Ross, Anne (2000). Folklore of the Scottish Highlands. Stroud: Tempus Publishing Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7524-1904-8.
மேலும் காண்க
தொகு- Krappe, A. H. (1936). "La Cailleach Bheara. Notes de mythologie Gaélique". Études Celtiques 1: 292–302.
- John Carey (Celticist) (1999). "Transmutations of Immortality in 'The Lament of the Old Woman of Beare'". Celtica 23: 30–7. http://www.celt.dias.ie/publications/celtica/c23/c23-30.pdf. பார்த்த நாள்: 2020-03-22.
வெளி இணைப்புகள்
தொகு- An Cailleach Bhéarra (2007) - an IFB short film (8 minutes)
- Ben Cruachan, the Hollow Mountain - The Legend of Cruachan, featuring the Cailleach Bheur
- Hags, Queens and Wise Women: Supernatural Females of the Irish Otherworld - RTÉ radio series, based on the work of Gearóid Ó Crualaoich
- Photos of the Hag's Chair and other megalithic features at Slieve na Calliagh, Ireland
- Putting out the hare, putting on the harvest knots - don't get stuck with the Cailleach