கெய்ரன் சிகரம்

கெய்ரன் சிகரம் (Cairn Hill) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி மலைகளில் உள்ள ஒரு சிகரம் ஆகும்.

இதன் உயரம் உயரம்: 6,583 அடி ஆகும். இது உதகமண்டலத்தில் உள்ள சிகரங்களில் மிகவும் அழகியது ஆகும். காரணம் மற்ற எல்லாச் சிகரங்களையும் விட இது மரங்களடர்ந்ததாக உள்ளதே ஆகும். மற்ற சிகரங்களில் மரங்கள் அழிக்கப்பட்டாற்போல் இதில் அழிக்கப்படவில்லை. பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற புல்வெளிகள் இச்சிகரத்தில் எங்கும் பரவிக் காணப்படுகின்றன. இங்குள்ள மரங்களின் அடியில் மேடையிட்டாற்போல் பாசி படர்ந்துள்ளது. கெய்ரன் சிகரம் உதகையிலிருந்து சற்றுத்தொலைவில் உள்ளது. நகரத்திலிருந்து புறப்பட்டு, ஏரியைச் சுற்றிச் செல்லும் தொடருந்து பாதையோரமாகச் சென்றோமானால், தூண்கள் போல் உயர்ந்து நிற்கும் பாறைகளைக் காணலாம். அவ்விடத்திலிருந்து ஒரு கல் தொலைவுகொண்ட பாதையாக் கடந்து, கெய்ரன் மலையின் இளமரக் காட்டிற்குள் நுழையலாம்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 95-208". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெய்ரன்_சிகரம்&oldid=3063588" இலிருந்து மீள்விக்கப்பட்டது