கெர்வான் (கிண்ணக்குழி)
கெர்வான் (Kerwan) என்பது சியரீசு குறுங்கோளின் மேற்பரப்பில் காணப்படும் மிகப்பெரிய ஒரு கிண்ணக்குழியாகும். 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சியரீசை நெருங்கிய டோன் விண்கலனின் படங்களில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. ஆழம் அதிகமில்லாமலும் மத்தியில் உச்சி எதுவுமின்றியும் இக் கிண்ணக்குழி காணப்படுவதாக தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் இருந்த உச்சி 15 கிலோமீட்டர் அகலமுள்ள கெரவானின் கிண்ணக்குழியாக அழிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இம்மையப் பகுதியே மிகப்பழமையானதாகவும் மற்றப்பகுதிகள் புதியதாக உருவாகி அதனில் மேற்பொருந்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கெர்வான் கிண்ணக்குழி. வலது புறம் வடக்கு. | |
Feature type | கிண்ணக்குழி |
---|---|
அமைவிடம் | சியரீசு |
ஆள்கூறுகள் | 11°28′S 122°35′E / 11.47°S 122.58°E |
விட்டம் | 283.88 கி.மீ |
ஆளம் | ~5 கி.மீ |
Eponym | கெர்வான், முளைக்கும் மக்காச்சோளத்தின் புனித ஆவி ஓப்பியின் பெயர் [1] |
முளைக்கும் மக்காச்சோளத்தின் புனித ஆவியாகக் கருதப்படும் ஓப்பியின் பெயரான கெரவான் இக்கிண்ணக்குழிக்கு பெயராக வைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வானியல் ஒன்றியம் ( IAU) சியரீசு குறுங்கோளின் இக்கிண்ணக்குழியின் பெயரை யூலை 3 2015 இல் அங்கீகரித்துள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Planetary Names: Crater, craters: Kerwan on Ceres". planetarynames.wr.usgs.go. IAU. பார்க்கப்பட்ட நாள் 17 July 2015.
இவற்றையும் காண்க
தொகுமுளைக்கும் மக்காச்சோளத்தின் புனித ஆவியாகக் கருதப்படும் ஓப்பியின் பெயரான கெரவான் இக்கிண்ணக்குழிக்கு பெயராக வைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வானியல் ஒன்றியம் ( IAU) சியரீசு குறுங்கோளின் இக்கிண்ணக்குழியின் பெயரை அங்கீகரித்துள்ளது.