கெல்வின்

வெப்பவியக்கவியல் வெப்பநிலையின் சர்வதேச நியம அலகு
கெல்வின்
வெப்பநிலை அலகு மாற்றீடு
கெல்வின்
இலிருந்து
கெல்வின்
இற்கு
செல்சியசு [°C] = [K] − 273.15 [K] = [°C] + 273.15
பாரன்ஃகைட் [°F] = [K] × 95 − 459.67 [K] = ([°F] + 459.67) × 59
ரேன்கின் [°R] = [K] × 95 [K] = [°R] × 59
குறிப்பிட்ட வெப்பநிலைகளுக்கு அல்லாது
வெப்பநிலை மாற்றங்களுக்கு,
1 K = 1°C = 95°F = 95°R

கெல்வின் (Kelvin) என்பது எசுஐ ("SI") முறையின் ஒரு வெப்ப அலகு. இவ்வளவீட்டின் பாகைக் குறியீடு K ஆகும். எசுஐ (SI) அலகு முறையில் உள்ள ஏழு அடிப்படையான அலகுகளில் இதுவும் ஒன்று. வெப்பநிலையை அளக்கப் பயன்படும் அளவீட்டு முறைகளில், இந்த கெல்வின் அளவீட்டை தனிமுழு (absolute) அளவீட்டு முறை என்பர். ஏனெனில், இந்த அளவீட்டின் படி சுழி கெல்வின் வெப்பநிலையானது (0 K) வெப்பவியக்கவியல் (Thermodynamics) கொள்கைகள் மற்றும் கருத்துக்களின் படியும் யாவற்றினும் கீழான அடி வெப்பநிலையாகும். எப்பொருளும் எக்காலத்திலும், இந்த சுழி கெல்வின் வெப்பநிலைக்குக் கீழே செல்லலாகாது. வெப்பநிலையின் முற்றான அடிக் கீழ் எல்லை ஆகும். இக் கெல்வின் வெப்ப அளவீட்டின்படி, நீரானது நீராகவும், நீராவியாகவும், உறைபனியாகவும் ஒரே நேரத்தில் கூடி இருக்கும் முக்கூடல் புள்ளி எனப்ப்படும், சீர்சம நிலையில் (அல்லது சீரிணை இயக்கநிலையில்) இருக்கும் பொழுது, அவ் வெப்பநிலையானது 273.16 K என கணித்துள்ளனர். இதன் செல்சியசு வெப்பநிலையனது 0.01 C ஆகும். இவ்வளவீட்டு முறையானது லார்டு (அல்லது பாரன்) கெல்வின் எனப் பெயர் பெற்ற அயர்லாந்தைச் சேர்ந்த வில்லியம் தாம்சன் (1824-1907) என்னும் இயற்பியல் அறிஞரின் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. வெப்ப இயக்கவியல் அடிப்படையில் ஒரு தனிமுழு வெப்ப அளவீட்டு முறையின் தேவை பற்றி இவர் எழுதியுள்ளார்.

வெப்பநிலை இடைவெளிகளில் ஒரு பாகை கெல்வின் என்பது ஒரு பாகை செல்சியசுக்குச் சமம். இடைவெளி 1 K = இடைவெளி 1 °C. பொதுவாக கெல்வின் பாகைகளைப் "பாகை" எனக் குறிப்பிடத்தேவை இல்லை. எடுத்துக்காட்டாக 6 கெல்வின் என்றால் 6 பாகை கெல்வின் என அறியப்படும்.

பிற வெப்ப அளவீட்டு முறைகளுடன் ஒப்பீடு

தொகு
கெல்வின்(K) செல்சியஸ் (C) பாரன்ஃகைட் (F)
தனிமுழுச் சுழி வெப்பநிலை

(துல்லியமான வரைவிலக்கணம்)

0 K −273.15 °C −459.67 °F
உறைபனி உருகும் வெப்பநிலை

(தோராயமாக) [1]

273.15 K 0 °C 32 °F
நீரின் முக்கூடல் புள்ளி

(துல்லியமான வரைவிலக்கணம்)

273.16 K 0.01 °C 32.018 °F
நீரின் கொதிநிலை

(தோராயமாக) [2]

373.1339 K 99.9839 °C 211.9710 °F

வெப்பநிலை அலகுகளுக்கிடையேயான தொடர்பு அட்டவணை

தொகு
கெல்வின்

மேற்கோள்

தொகு
  1. The ice point of purified water has been measured to be 0.000089 +/- 0.00001 degrees Celsius - see Magnum, B.W. (June 1995). "Reproducibility of the Temperature of the Ice Point in Routine Measurements" (PDF). Nist Technical Note 1411. http://www.cstl.nist.gov/div836/836.05/papers/magnum95icept.pdf. பார்த்த நாள்: 2007-02-11. 
  2. For Vienna Standard Mean Ocean Water at one standard atmosphere (101.325 kPa) when calibrated solely per the two-point definition of thermodynamic temperature. Older definitions of the Celsius scale once defined the boiling point of water under one standard atmosphere as being precisely 100 °C. However, the current definition results in a boiling point that is actually 16.1 mK less. For more about the actual boiling point of water, see VSMOW water in temperature measurement.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்வின்&oldid=3286819" இலிருந்து மீள்விக்கப்பட்டது