கேசரி யோகம் (சோதிடம்)

கேசரி யோகம் தனி ஒருவரின் சாதகக் குறிப்பில் காணப்படும் நன்மைதரும் யோகமாகும். [1] ஒருவரின் சாதகக் குறிப்பில் சந்திரன் நின்ற இராசியிலாயினும், அதற்கு 4, 7, 10 ஆகிய இடங்களில் வியாழன் இருந்தால் கேசரி யோகமாகும். இதன் பலன் வித்தியாவேகம், தருமத்தில் விருப்பம் என்பனவாகும். 1, 4, 7, 10 ஆகிய இடங்கள் சந்திரனுக்கும் வியாழனுக்கும் நன்மை பயக்கும் இடங்களாக இருந்தால் விசேட யோக பலன் உண்டாகும். இந்த யோக பலத்தினால் மற்றைய கிரகங்களிள் குரூரஸ்தானங்களில் இருந்து செய்யுந் தோஷங்கள் நிவாரணமாகும்.

வருச்சி கேந்திரத்தில் மன்னவன் நிற்க
அரசன்தன் கேந்திரத்தில் அம்புலிதானும் நிற்க
விரவு மற்றிடத்தின் மற்றோர் மேவிய தோஷம்
யானை ஒரு சிங்கம் கண்டவாறு ஓடுமாம் - கஜ கேசரி யோகம்.

உசாத்துணை தொகு

  • ஜாதக பாஸ்கரன்

மேற்கோள் தொகு

  1. திருமூலர் இயற்றிய திருமந்திரம், திருப்பனந்தாள், காசி மடம் பதிப்பு, 2003, மூன்றாம் தந்திரம், தலைப்பு 18 கேசரி யோகம். பக்கம் 107 முதல் 111, 26 பாடல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசரி_யோகம்_(சோதிடம்)&oldid=3322957" இலிருந்து மீள்விக்கப்பட்டது