கேசி (அரக்கன்)

கேசி என்பவர் இந்து தொன்மவியிலில் இடம்பெற்றிருக்கும் அரக்கனாவார்.[1] இவர் பல்வேறு வடிவங்கள் எடுக்கும் திறன் பெற்றவர் என்று கூறப்படுகிறது. இந்து சமய இதிகாசமான மகாபாரதத்தில் இவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் கம்சனின் கையாளாக கண்ணனைக் கொல்வதற்கு கோகுலத்திற்கு குதிரை வடிவத்தில் சென்றார். இவர் அரக்கன் என்பதை அறிந்த கண்ணன் குதிரையில் வடிவத்தில் இருந்த கேசியிடம் சண்டையிட்டான். அந்த சண்டையில் குதிரையின் வாயைப் பிளந்து கேசியைக் கொன்றான்.[2] இதனை கேசி வதம் என்று கூறுகின்றார்கள். [3] இவ்வாறு கேசியை வதம் செய்த இடம் தற்போது கேசிகாட் என்று அழைக்கப்படுகிறது. [4] கேசியை வென்றமையால் கண்ணன் கேசவன் என்று புகழப்படுகிறார். [5]

ஆதாரங்கள்தொகு

  1. http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=108&pno=919
  2. http://www.dinamalar.com/news_detail.asp?id=1417129&Print=1
  3. http://www.siruvarmalar.com/sri-bhagavan-krishna-stories-1404.html
  4. http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article853995.ece?service=print
  5. http://temple.dinamalar.com/news_detail.php?id=10982
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசி_(அரக்கன்)&oldid=2107246" இருந்து மீள்விக்கப்பட்டது