கேட் பாக்சு

கேட் பாக்சு (Kate Fox) என்பவர் இலண்டனில் வாழ்ந்து வரும் சமூக மாந்தவியலாளர் ஆவார். சமூகப் பிரச்சினைகள் ஆராய்ச்சி மையத்தின் இணை இயக்குநரும், பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் மதிப்புறு உறுப்பினரும் ஆவார். இந்தப் பெண்மணி பல நூல்களை எழுதியுள்ளார். [1]

இளமைக் காலம் தொகு

கேட் பாக்சுவின் தகப்பனார் ராபின் பாக்சு ஆவார். அவரும் ஒரு மாந்தவியலாளர். கேட் பாக்சு தமது இளம் அகவையில்  ஐக்கிய இராச்சியத்திலும், அமெரிக்காவிலும், பிரான்சிலும்,  அயர்லாந்திலும்  வளர்ந்தார். கேம்பிரிட்ச்  பல்கலைக் கழகத்தில் மாந்தவியலும் மெய்யியலும் பயின்றார்.[2]

ஆய்வுப்பணிகள் தொகு

ஆங்கிலேயர்களின் புரிந்து கொள்ள முடியாத நடத்தைகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், நாகரிகம், பண்பாடுகள் முதலியன பற்றி ஆய்வுகள் செய்து தமது நூலில் எழுதியுள்ளார். ஆங்கிலேயர்களின் மது அருந்தும் பழக்கத்தைப் பற்றியும் நூல் எழுதியுள்ளார்.[3] ஆண் பெண் உறவு, இளைஞர்களின் இற்றைக் கால பழக்கங்கள்,கனவுகள், கைபேசி குதிரைப் பந்தயத் தீங்குகள் ஆகியன குறித்து எழுதியும் பேசியும் வருகிறார். சைக்காலஜிஸ்ட் என்னும் இதழில் பத்தி எழுத்தாளராக இருக்கிறார்.[4]

குடும்பம் தொகு

கேட் பாக்சுவின் கணவர் என்றி மார்சு என்னும் நரம்பியல் அறுவை மருத்துவர் ஆவார்.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேட்_பாக்சு&oldid=3241570" இலிருந்து மீள்விக்கப்பட்டது