கேட் புரூக்சு

கேட் ஜே

கேட் ஜே. புரூக்சு (Kate J. Brooks) ஓர் ஆத்திரேலிய வானியலாளர் ஆவார். இவர் ஆத்திரேலியத் தேசியத் தொலைநோக்கி ஏந்தமைப்பில் மைய அறிவியல் தொழிலக ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.[1] இவர் தனது நிறுவனத்தின் பார்க்கேசு வான்காணகம், நெராபிரியில் உள்ள பவுல் வைல்டு வான்காணகம், முர்ச்சிசன் கதிர்வீச்சு வானியல் காணகம் ஆகிய மூன்று தொலைநோக்கிகளுக்கு இயக்கத் துணைத்தலைவராக உள்ளார். இவரது பெயரில் உள்ள வெளியீடுகளில் நாற்பதுக்கும் மேற்பட்டவை தொடர்ந்து மேற்கோள்களாகச் சுட்டப்படுகின்றன. இவர்பால்வெளி விண்மீன் ஆக்க வட்டாரங்களின் ஆய்வால் பெரும்பெயர் பெற்றவர் ஆவார்.[2]

இவர் இளம்பெண் அறிவியலாரையும் இளம் ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவிக்கிறார். எனவே, இவர் வானியல் மகளிர் பிரிவின் தொடக்கநிலை முடுக்கக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.

வாழ்க்கைப்பணி

தொகு

இவர் ஆத்திரேலியத் தேசியத் தொலைநோக்கி ஏந்தமைப்பில் மைய அறிவியல் தொழிலக ஆராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்கத் துணைத்தலைவராக உள்ளார்.இவர் சிட்னி பல்கலைக்கழக அறிவியல் புல இயற்பியல் பள்ளியின் தகைமைஇணையுறுப்பினராக உள்ளார்.இவர் ஆத்திரேலிய வானியல் கழகத்தின் துணைத்தலைவராக உள்ளார். இவர் ஆத்திரேலிய வானியல் கழகப் பாசா வெளியீட்டின் பதிப்ப்சிரியர் குழு உறுப்பினராக உள்ளார்.இவர் 2011 இல் இருந்து 2013 வரை ஆத்திரேலிய வானியல் கழக மன்றத் தலைவராக விளங்கினார்.இவர் 2011 இல் மைய அறிவியல் தொழிலக ஆராய்ச்சி நிறுவனத் தொலைநோக்கி அசுகாப்பின் செயல் அலுவலர் ஆனார்.

2004இல் இவர் மைய அறிவியல் தொழிலக ஆராய்ச்சி நிறுவனத்தின் பவுள்டன் ஆய்வுறுப்பினர் ஆனார்[3] 1998 இல் இருந்து 2003 வரை சிலி பல்கலைக்கழக ஐரோப்பியத் தெற்கு வான்காணகத்தில் பணிபுரிந்தார்

மேற்கோள்கள்

தொகு
  1. "Kate Brooks - Millimetre Astronomy Research Scientist".
  2. "Scopus preview - Scopus - Author details (Brooks, Kate J.)". www.scopus.com. பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.
  3. "Past and Present Bolton Fellows".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேட்_புரூக்சு&oldid=4041928" இலிருந்து மீள்விக்கப்பட்டது