கேண்டிபார்

கேண்டிபார் (CandyBar) என்பது மாக்கு இயக்கி எக்சின் (Mac OS X) கீழ் இயங்கும் ஒரு பயன்பாட்டு மென்கலம். இதனை பேனிக்கு என்னும் நிறுவனமும், த ஐக்கான்ஃவேக்டரி என்னும் அடையாளச்சின்னம் வடிவுருவாக்கு நிறுவனமும் உருவாக்கின. இம் மென்கலத்தின் பயன்பாடு, மாக்கு இயக்கி கணினியின் திரையில் தெரியுமாறு வழங்கும் அடையாளச் சின்னங்களை, பயனர்கள் தங்களுக்கு விருப்பமானவாறு மாற்று வடிவத்தில் அமைத்துக்கொள்ள உதவும் ஒரு மென்கலம். எடுத்துக்காட்டாக கோப்புகளைக் காட்டும் ஓர் அடையாளச்சின்னத்தை பயனர்கள் விரும்பும் வேறு ஒரு வடிவில் அமைந்த அடையாளச்சின்னமாக மாற்றிக்கொள்ளலாம். அண்மைய வெளியீடாகிய கேண்டிபார் 3 (CandyBar 3) மாக் இயக்கி சிறுத்தையின் (லெப்பர்டு) (Mac OS X 10.5 "Leopard"), மாக்கு இயக்கி பனிச்சிறுத்தை (Mac OS X v10.6 அல்லது 10.6 "Snow Leopard") ஆகியவற்றின் கீழ் இயங்குகின்றது. இவை 512 x 512 படவணுக்கள் உயர் துல்லிய "சிறுத்தை"ச் சின்னங்களாக வழங்கவல்லன; லெப்பர்டு இடாக்கு (Leopard dock) என்பதையும் மாற்றியமைக்க வல்லது. பயனர்கள் பல்வேறு வகையான அடையாளச் சின்னங்களையும் இடாக்கு என்னும் இணைப்புகளையும் ஐக்கான்ஃவேக்டரி வலைத்தளத்தில் இருந்து பெறலாம். கேண்டிபார் என்பது ஐக்கான்ஃவேக்டரியின், முன்பிருந்த ஐக்கன்ட்ரோல் (iControl) என்னும் மென்கலத்தின் வழித்தோன்றல் மென்கலம். இந்த ஐக்கன்ட்ரோல் மாக்கு இயக்கி 8, 9 களுக்குப் பயன்படுத்தப் பட்டது.

கேண்டிபார்
CandyBar
உருவாக்குனர்பேனிக்கு (கும்பனி), த ஐக்கான்ஃவேக்டரி
(Panic and The Iconfactory)
அண்மை வெளியீடு3.2 / 2009-08-25
இயக்கு முறைமைமாக் இயக்கி எக்சு (Mac OS X)
மென்பொருள் வகைமைஒருங்கியப் பயன்பாட்டு வகை
உரிமம்பகிர்மென்கலம் (Shareware)
இணையத்தளம்Panic - CandyBar

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேண்டிபார்&oldid=1368156" இலிருந்து மீள்விக்கப்பட்டது