கேதார் நாத் சாகு

அரசு சாவ் நடன மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர்

கேதார் நாத் சாகு (Kedar Nath Sahoo) இந்திய நாட்டினைச் சார்ந்த பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் சாவ் நடனத்தின் செரைகெல்லா பாரம்பரியத்தின் முன்னணி நிபுணர்களில் ஒருவராக அறியப்படுகிறார். [1][2] [குறிப்பு 1].இவர் சார்க்கண்டு மாநில அரசாங்கத்தின் அரசு சாவ் நடன மையத்தின் (சாவ் நிருத்யா கலா கேந்திரா) நிறுவனர் மற்றும் இயக்குநராக பணியாற்றினார். அந்நிறுவனத்தில் 1974 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[4][5] தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில், குமார் பிசய் பிரதாப் சிங் தியோ தலைமையிலான குழுவுடன் இணைந்து நடித்தார். ஆனால் பின்னர் கிழக்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா உட்பட இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல இடங்களில் தனது சொந்த நடனக் குழுவை வழிநடத்தினார். இவரது மாணவர்களில் சரோன் லோவன், கோபால் பிரசாத் துபே மற்றும் சசாதர் ஆச்சார்யா போன்ற பல குறிப்பிடத்தக்க நடனக் கலைஞர்கள் அடங்குவர்.[6][7][8][9] 1981 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்ற இவர், கலைகளுக்கு செய்த பங்களிப்புகளுக்காக 2005 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நான்காவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[10][11] இவரது வாழ்க்கையின் பிற்பகுதியில், உடல்நிலை மோசமடைந்து தனது 88 ஆவது வயதில் கன்சாரி டோலாவில் உள்ள தனது வீட்டில் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதியன்று இறந்தார்.[12] இவருக்குத் திருமணமாகி ஐந்து மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர்.[13]

கேதார் நாத் சாகு
பிறப்புசெரைகெல்லா, சார்க்கண்டு, இந்தியா
இறப்பு8 அக்டோபர் 2008
கன்சாரி தோலா, ஜார்கண்ட், இந்தியா
பணிபாரம்பரிய நடனக் கலைஞர்
அறியப்படுவதுசாவ் நடனம்
பிள்ளைகள்ஐந்து மகன்கள் மற்றும் நான்கு மகள்கள்
விருதுகள்பத்மசிறீ
சங்கீத நாடக அகாடமி விருது

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. சாவ் நடனம் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Chhau dance guru 'Padmshree' Kedar Nath Sahu passes away". One India. 9 October 2008. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
  2. Richard Schechner (3 August 2010). Between Theater and Anthropology. University of Pennsylvania Press. pp. 100–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8122-0092-6.
  3. "Intangible Heritage Lists". UNESCO. 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
  4. "Seraikella Chhau History" (PDF). Government of Jharkhand. 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
  5. "Chhau Styles of Dance". Sharron Lowen. 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
  6. Julia Hollander (12 September 2007). Indian Folk Theatres. Routledge. pp. 52–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-40779-8.
  7. "Biography". Trinetra Chhau Dance Centre. 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
  8. "Blending grace and valour". 28 June 2006. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.
  9. "Eminent Exponent of Chhau". BIAF. 2016. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.
  10. "Akademi Awardees". Sangeet Natak Akademi. 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
  11. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2013. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 20 August 2016.
  12. "Support for senior Chhau exponents". The Telegraph. 8 August 2006. Archived from the original on 27 August 2018. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.
  13. "Chhau dance guru 'Padmashree' Kedar Nath Sahu dead". One India. 9 October 2008. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.

வெளி இணைப்புகள்

தொகு

மேலும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேதார்_நாத்_சாகு&oldid=4136088" இலிருந்து மீள்விக்கப்பட்டது