கேத்தி வில்காக்ஸ்

கேட்டி வில்காக்ஸ், அமெரிக்காவின் கனெக்டிகட் மாகானத்தில் 1889, ஜூலை 26 அன்று பிறந்தவர். கல்விப்படிப்பை முடித்த வேளையில் இறை அழைப்பை உணர்ந்த இவர், மிஷனரியின் சேவைகளில் தம்மை இணைத்துக் கொண்டார். 1915, டிசம்பர் 11ல் தமிழகம் வந்த இவர் 1958ல் தாயகம் செல்லும் வரையிலான மதுரைக் கல்வி வரலாற்றில் இவருடைய பங்களிப்பு அளப்பறியது.

Miss Katie Wilcox

கேப்ரன்ஹால் பள்ளியில் ஆங்கிலம் – கணிதம் பயிற்றுவிக்க ஆசிரியையாக வந்த கேட்டிவில்காக்ஸ், பள்ளி தலைமையாசிரியர் அருட்சகோதரி நாய்ஸ் அவர்களோடு இணைந்து செயலாற்றினார். ஆற்றுக்கு மறுபக்கம் தல்லாகுளம் பகுதியில் வாங்கிய பனந்தோப்பில் கல்விநிறுவனங்களை உருவாக்குவது அவர்களது கூட்டுக் கனவாக இருந்தது.

எதிர்பாராதவிதமாக அருட்சகோதரி நாய்ஸ் இயற்கை எய்தினார். கேட்டிவில்காக்ஸ், கேப்ரன்ஹால் பள்ளியின் தலைமையாசிரியை பொறுப்பேற்றார். அதோடு அவர்களது கனவை செயல்படுத்தும் பணியையும் இறைத் துணையோடு தொடங்கினார்.

கேட்டி வில்காக்ஸ் அம்மையாரின் கடும் உழைப்பாலும், பலரது உதவியினாலும் ஓ.சி.பி.எம். பெண்கள் மேனிலைப் பள்ளியையும், நாய்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியையும் தொடங்கினார். அதன்பிறகும் அவரது உழைப்பும், தேடுதலும் தீரவில்லை. தம்முடைய தோழி ஹெலன் டோக் மற்றும் அவரது கணவர் ஜேம்ஸ் டோக் உதவியோடு 1948ல் சுதந்திர இந்தியாவில் மதுரையின் முதல் பெண்கல்லூரியாக லேடிடோக் கல்லூரி தொடங்கினார்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேத்தி_வில்காக்ஸ்&oldid=3944975" இலிருந்து மீள்விக்கப்பட்டது