கேனாங்கின் ஒளித்திரை சோதனை

கேனாங்கின் ஒளித்திரை சோதனை (Ganong's light screen experiment) என்பது ஒளிச்சேர்க்கைக்கு ஒளி அவசியம் என்பதை நிரூபிக்க உதவும் ஒரு சோதனையாகும். கேனாங்கின் ஒளித்திரை கருவியில் வட்ட வடிவ தகட்டில் நட்சத்திர வடிவ பகுதியும் அதன் கீழ்ப்பகுதி உள்ளீடற்ற உருளையைக் கொண்டும் அமைக்கப்பட்டிருக்கும். இவ்விரண்டு பகுதிகளும் இடுக்கி போன்ற அமைப்பால் இணைக்கப்பட்டிருக்கும். இதில் நட்சத்திர பகுதி வழியே மட்டுமே ஒளி ஊடுருவ முடியும். நட்சத்திர வடிவ தகட்டிற்கும் உருளைக்கும் இடையே தொட்டித் தாவரத்தின் ஒரு இலையைப் பொருத்த வேண்டும். இந்த அமைப்பினை சூரிய ஒளியில் 4 முதல் 6 மணி நேரம் வரை வைத்திருக்க வேண்டும். கேனாங்கின் ஒளித்திரை கருவியோடு இணைக்கப்பட்டிருந்த அந்த இலையை ஸ்டார்ச் சோதனைக்கு உட்படுத்தும் போது, நட்சத்திர வடிவ பகுதியின் வழியாக ஒளியைப் பெற்ற இலைப்பகுதி மட்டும் நீல நிறமாக மாறுகிறது. இதன் மூலம் ஒளிச்சேர்க்கைக்கு சூரிய ஒளி அவசியம் என்பதை கேனாங்கின் ஒளித்திரை சோதனை மூலம் நிருபிக்கலாம்.[1]

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. N. Y., Rochester. Ganong Botanical Apparatus A General Catalogue (Second ed.). Bausch & Lomp Optical Co. pp. 7–10.