கேபிரியேல் இரெனவுதோத் பிளம்மாரியன்

கேபிரியேல் இரெனவுதோத் பிளம்மாரியன் (Gabrielle Renaudot Flammarion) (31 மே 1877 – 28 அக்தோபர் 1962) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் பிரான்சில் உள்ள யுவிசி-சுர்-ஆர்கே வான்காணகத்தில்பணிபுரிந்தார். இவர் பிரான்சு வானியல் கழகத்தின் பொது செயலாளராகவும் இருந்துள்ளார்.

இவர் செவ்வாய் மேற்பரப்பின் மாறும் கூறுபாடுகள் பற்றியும் வியாழன் பெருஞ்செம்பொட்டு பற்றியும் மாறும் விண்மீன்கள், கோள்கள், சிறுகோள்கள் ஆகியவற்றின் நோக்கிடுகள் பற்றியும் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.

கேபிரியேல் இரெனவுதோத் என்ற பெயரில் பிறந்த இவர் காமில்லே பிளம்மாரியன்]] எனும் வானியலாளரை மணந்துகொண்டார்.

செவ்வாயில் உள்ள ஒரு மொத்தல் குழிப்பள்ளமும் 355 Gabriella எனும் சிறுகோளும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு