கேப்ஜெமினி
கேப்ஜெமினி பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு மேலாண்மை ஆலோசனை நிறுவனம். இது பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிசைத் தலைமையிடமாககொண்டு செயல்படுகிறது. இது தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மற்றும் உலகின் மிகப்பெரிய ஆலோசனை சேவை, அவுட்சோர்சிங் மற்றும் தொழில்முறை சேவைகளை வழங்குகின்றது. இந்நிறுவனம் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 145,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இது செர்ஜ் கேம்ப், (தற்போதைய துணைத் தலைவர்), என்பவரால் 1967 ஆம் ஆண்டு பிரான்சில் உள்ள கிரனோபிளில் நிறுவப்பட்டது. பால் ஹெர்மிலின் கேப்ஜெமினி குழுத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக 2001 ஆம் ஆண்டு டிசம்பரில் நியமிக்கப்பட்டார்.[1][2][3]
கேப்ஜெமினி வட மற்றும் தென் அமெரிக்கா, வட ஐரோப்பா & ஆசியா பசிபிக் மற்றும் மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பா ஆகிய இடங்களில் தனது பிராந்திய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இதன் சேவைகள் நான்கு துறைகளில் வழங்கப்படுகிறது அவை ஆலோசனை, தொழில்நுட்பம், அவுட்சோர்ஸிங் மற்றும் உள்ளூர் நிபுணத்துவ சேவைகள். மேலும் இதன் சொஜிட்டி (Sogeti), என்ற துணை நிறுவனம் மூலமாகவும் சேவைகள் வழங்கப்படுகிறது.
வரலாறு
தொகுகேப்ஜெமினி 1967 ம் ஆண்டு செர்ஜ் கேம்ப் (Serge Kampf) என்பவரால் நிறுவன மேலாண்மை மற்றும் தரவு செயலாக்க நிறுவனமாக நிறுவப்பட்டது.
- 1973 ஆம் ஆண்டு சொஜிட்டி (Sogeti) அதன் முக்கிய ஐரோப்பிய சேவைகளுக்கான போட்டியாரின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது. கேப் (CAP-Centre d'Analyse et de programmation).
- 1974 ஆம் ஆண்டு சொஜிட்டி நியூயார்க்கில் இருக்கும் ஜெமினி கணினிகள் என்ற அமெரிக்க நிறுவனததை வாங்கியது.
- 1975 ஆம் ஆண்டு கேப் (CAP) மற்றும் ஜெமினி கணினிகள் பங்குகளை வாங்கிய பிறகு தனது நிறுவனத்தின் பெயரை ’சொஜிட்டி’யிலிருந்து கேப் ஜெமினி சொஜிட்டி என மாற்றியது.
- 1981 ஆம் ஆண்டில் கேப் ஜெமினி சொஜிட்டி, மில்வாக்கி (Milwaukee-based DASD Corporation) என்ற நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அமெரிக்காவில் தனது நடவடிக்கைகளை தொடங்கியது.
- 1986 ஆம் ஆண்டில், காப் ஜெமினி சொஜிட்டி அமெரிக்காவை தளமாக கொண்ட CGA கணினி ஆலோசனை பிரிவை கைப்பற்றி காப் ஜெமினி அமெரிக்கா உருவாக்கப்பட்டது.
- 1991 ஆம் ஆண்டில், ஜெமினி ஆலோசனை நிறுவனமானது இரண்டு மேலாண்மை கலந்தாய்வு நிறுவனங்கள் (ஐக்கிய ஆராய்ச்சி மற்றும் MAC குழு) ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது.
- 1995 ஆம் ஆண்டில், காப் ஜெமினி வணிக உருவாக்க மையம் அதன் இயக்குனர் கிறிஸ்டோபர் மேயர் தலைமையின்கீழ் நிறுவனம் சார்ந்த பல்கலைக்கழக மாதிரியில் இருந்து கூட்டு ஆராய்ச்சி திறனை நிறுவனமாக மாற்றப்பட்டது.
- 1996 ஆம் ஆண்டில், இதன் பெயரானது காப் ஜெமினி(Cap Gemini )எனவும் இதன் முத்திரை எளிமையாக புதிய முறையிலும் மற்றியமைக்கப்பட்டன.
- 2000 ஆம் ஆண்டில், காப் ஜெமினி எர்னஸ்ட் & யங் ( Ernst & Young Consulting) என்ற ஆலோசனை நிறுவனத்தை வாங்கியது.
- 2002 ஆம் ஆண்டில், காப் ஜெமினி பெல்ஜியத்தை தலைமையிடமாக கொண்டு சொஜிட்டி செயல்படடத்துவங்கியது, இப்புதிய நிறுவனம் வரம்பிற்குட்பட்ட சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தின.
- 2003 ஆம் ஆண்டில், டிரான்சைல் (Transiciel) என்ற நிறுவனத்தை வாங்கியது (பின்னர் 2006 இல் சொஜிட்டி உடன் இணைக்கப்பட்டது)
- ஏப்ரல் 2004 இல் கேப்ஜெமினி குழு ( அதன் தற்போதைய பெயர் ) என மாற்றியமைக்கப்பட்டது
- கடுமையான இழப்புகள் காரணமாக 2005 ல் கேப்ஜெமினியின் வட அமெரிக்க சுகாதார ஆலோசனை தொழில், செலுத்துவோர் மற்றும் வழங்குநர் நடைமுறைகள் ஆகிய நிறுவனங்களை ஆக்செஞ்சுவர் (Accenture)ரிடம் விற்கப்பட்டது ஆனால் அதன் வாழ்க்கை அறிவியல் நடைமுறையைத் தன்னிடமே வைத்துக் கொண்டது
மேலாண்மை
தொகுகேப்ஜெமினி நிர்வாக குழு 18 உறுப்பினர்களைக் கொண்டது. பால் ஹெர்மிலின் குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுகிறார். பால் ஹெர்மிலின் 1993 ல் கேப்ஜெமினியில் சேர்ந்தார் மற்றும் 2002 ல் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கேப்ஜெமினி 40 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. உகந்த செலவுகள் மற்றும் தரத்தை உறுதி செய்தல் அதே நேரத்தில் விரைந்த வினியோகம் ஆகியவற்றில் சிறந்தவை.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cap Gemini SA, CAP:PAR financials 2023". Capgemini. 14 February 2024.
- ↑ "CAPGEMINI REPORTS Q1 2023 GROWTH ABOVE 10%". 4 May 2023.
- ↑ "Cap Gemini (School of Computer Science – The University of Manchester)". Cs.manchester.ac.uk. 6 July 2010. Archived from the original on 7 September 2009. பார்க்கப்பட்ட நாள் 22 July 2010.