கேமிலோ டோரஸ் ரிஸ்ட்ரிபோ

கேமிலோ டோரஸ் ரிஸ்ட்ரிபோ (Camilo Torres Restrepo 3, பிப்பிரவரி 1929–15 பிப்பிரவரி 1966) என்பவர் கொலம்பியாவின் சோசலிசவாதி, மற்றும் உரோமன் கத்தோலிக்க பாதிரியார் ஆவார். இவர் தேசிய விடுதலைப்படை கொரில்லா இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார். கத்தோலிக்க மத நெறியைப் பரப்பும் செயலில் பாதிரியாராக இருந்த கேமிலோ புரட்சிகர மார்க்சியக் கொள்கையில் ஈடுபட்டார்.[1]

கேமிலோ டோரஸ் ரிஸ்ட்ரிபோ
பிறப்பு3 பெப்பிரவரி 1929
பொகோட்டா
இறப்பு15 பெப்பிரவரி 1966 (அகவை 37)
San Vicente de Chucurí
பணிகத்தோலிக்க பாதிரியார், அரசியல்வாதி, எழுத்தாளர்
இணையம்http://www.camilovive.com/

அரசியல் போராட்டம்

தொகு

கொலம்பியாவின் தலைநகரான பொகொடாவில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த கேமிலொ அநீதி, ஊழல் மற்றும் பொருளாதார் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு எதிராகப் போராடத் தொடங்கினார்.

இவர் கொலம்பியா தேசிய பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியில் இருந்தபோது சமூகவியல் பிரிவைத் தொடங்கினார். அதன் விளைவாக மாணவர்கள் போராட்டத்திலும் பின்னர் அரசியல் போராட்டத்திலும் கலந்து கொண்டார். அரசோடும் மத நிறுவனத்தோடும் இவர் போராடும் நிலை உருவானது. கல்லூரி வேலையைத் துறந்து கொரில்லா இயக்கத்தில் இணைந்தார். கொலம்பிய அரசுப் படைகளுடன் ஏற்பட்ட போரில் இவர் கொல்லப் பட்டார்.

சான்றாவணம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேமிலோ_டோரஸ்_ரிஸ்ட்ரிபோ&oldid=2734508" இலிருந்து மீள்விக்கப்பட்டது