கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் முதல் சான்றிதழ்

கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் முதல் சான்றிதழ் (Cambridge English: Certificate in English (FCE)) என்பது கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு வழங்கும் ஆங்கில மொழித் தேர்வு ஆகும். கேம்பிரிச்சு ஆங்கிலம்: இது மேல்-நடுத்தர, பன்னாட்டு ஆங்கிலத் தரம் ஆகும்.

கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் முதல் சான்றிதலுக்கும் ஐரோப்பிய மொழித் தேர்வுக்குமிடைலான ஒப்பீடு.

கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு வழங்கும் கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் முதல் சான்றிதழ் அதிகம் பரவலாக பரீட்சார்த்திகளால் பங்குபற்றப்படும் தேர்வுகளில் ஒன்று ஆகும். இது வாணிபம், தொழிற்சாலை, பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இதன் மூலம், நாளாந்த வேலையிலும் கல்விச் செயற்பாடுகளிலும் எழுதவும் பேசவும் முடியும் என கருதப்படுகின்றது.[1]

கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் முதல் சான்றிதழ் இரு வகையான தேர்வுகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று வயது வந்தவர்களுக்கும், மற்றது பாடசாலை மாணாக்கருக்குமானது. இரு தேர்வுகளும் ஒரே அளவு தரத்தைக் கொண்டுள்ளதுடன், ஒரே தேர்வு அமைப்பினைக் (4 தேர்வுத் தாள்கள்) கொண்டுள்ளது. பாடசாலை மாணாக்கருக்கான தேர்வு பாடசாலை ஆர்வம், அனுபவம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

உசாத்துணைதொகு