கேம்பைலைட்டு

ஈய ஆர்சனேட்டு கனிமம் மிமீடைட்டின் ஒரு வகை கனிமம்

கேம்பைலைட்டு (Campylite) என்பது ஈய ஆர்சனேட்டு கனிமம் மிமீடைட்டின் ஒரு வகை கனிமம் ஆகும். பீப்பாய்-வடிவம் கொண்ட படிகங்கள் என்பதைக் குறிக்கின்ற வகையில் கிரேக்க மொழியில் வளைவான என்ற பொருள் கொண்ட காம்பைலாசு என்ற சொல்லில் இருந்து இக் கனிமத்திற்கு கேம்பைலைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது. ஈயக் கனிமம் பைரோமார்பைட்டு என்பதைக் குறிக்கும் ஒரு மாற்றுப் பெயராகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

மிமீடைட்டு (கேம்பைலைட்டு வகை)

கலீனா அல்லது செருசைட்டு கனிமத்தின் ஆக்சிசனேற்றத்தால் பொதுவாக கேம்பைலைட்டு மேற்புறமான ஈயப் படிவுகளில் தோன்றுகிறது. பொகிமியாவிலுள்ள பிரிப்ரம் நகரமும், வடமேற்கு இங்கிலாந்தின் கம்பிரியா மாகாணத்திலுள்ள விக்டான் நகரமும் கேம்பைலைட்டு கிடைக்கும் முக்கியமான சில இடங்களாகும்.

மேற்கோள்கள்

தொகு

மேலும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேம்பைலைட்டு&oldid=2690220" இலிருந்து மீள்விக்கப்பட்டது