கேரள உள்ளாட்சி அமைப்பு சட்டம்

அதிகார பன்முகமாக்களின் உயிர் நாடிதான் பஞ்சாயத்து ராஜ் சட்டம் (உள்ளாட்சி அமைப்பு சட்டம்). உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மையப்படுத்தப்பட்ட அதிகார முறையை மாற்றியமைத்து அதிகாரம் சாதாரன மக்களின் இடத்தில் கொண்டு செல்வதற்காக அரசியல் அமைப்பின் 73-ம் சீர்திருத்தத்தின் வாயிலாக கொண்டு வரப்பட்டதுதான் பஞ்சாயத்து ராஜ் எனப்படும் உள்ளாட்சி அமைப்பு முறை[1]. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் முப்பரிமாண உள்ளாட்சி அமைப்பு முறையை நடப்பாக்கவும் குறிப்பிட்ட கால அளவில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தவும் வளர்ச்சி திட்டத்தில் மக்களின் பங்களிப்பையும் தலைமையையும் உறுதி செய்யவும் இந்த சீர்திருத்தம் பரிந்துரைக்கிறது.

கேரள உள்ளாட்சி சட்டம்: துடக்கமும் பரவலாக்கமும் தொகு

கேரள உள்ளாட்சிகளுக்கான பொதுவான சட்டமாகும் கேரள உள்ளாட்சி செய்யுள், 1994 (Kerala Panchayath Raj Act,1994). நிலவில் இருந்த உள்ளாட்சி, மாவட்ட அவை முதலிய முறைகளைப் பற்றிய சட்டங்களுக்கு பதிலாக கொண்டு வரப்பட்டதாகும் இது. இதை முன்நிறுத்தி கேரள சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம், 1994 ஏப்ரல் 23-ல் மாநில ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று நடைமுறைக்கு வந்தது. கேரள மாநிலத்தில் பேரூராட்சி (நகர பஞ்சாயத்து), நகராட்சி (முனிசிபல் கவுன்சில்), மாநகராட்சி (முனிசிபல் கார்ப்பரேஷன்), தொழில் பகுதிகள் மற்றும் இராணுவ முகாம்கள் அல்லாமல் மாநிலம் முழுவதும் இந்த சட்டத்திற்கு பரவலும் நடப்பாக்கமும் இருக்கும். இது வெளியிடப்பட்ட நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது.

சீர்திருத்தங்கள் தொகு

1994-ன் மூலசட்டத்தில் பலகட்டங்களிலாக சீர்திருத்தங்கள் வேண்டி வந்தது.

(i) கேரள உள்ளாட்சி (சீர்திருத்த) சட்டம் 1995

(ii) கேரள உள்ளாட்சி (சீர்திருத்த) சட்டம் 1996

(iii) கேரள உள்ளாட்சி (சீர்திருத்த) சட்டம் 1999

(iv) கேரள வட்டார தன்னாட்சி நிறுவனங்கள் (கட்சி மாறல் தடை) சட்டம் 1999

(v) கேரள அதிகார பன்முகமாக்க சட்டம் 2000

(vi) கேரள உள்ளாட்சி (சீர்திருத்த) சட்டம் 2005

(vii) கேரள உள்ளாட்சி (சீர்திருத்த) சட்டம் 2009

வரையரைகள் தொகு

இந்த சட்டத்தில் பயன்படுத்தியுள்ள சில நுட்பமான சொல் மற்றும் சொற்தொடர் போன்றவற்றிற்கு கீழே தரப்படும் பொருள் கொள்கிறது.

உறுப்பு தொகு

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் ஓர் உறுப்பு

மண்டல உள்ளாட்சி தொகு

கேரள உள்ளாட்சி சட்டம் பிரிவு 4(1) பி-ன் படி இடைத்தலத்தில் உருவாக்கப்படுவதாகும் மண்டல உள்ளாட்சி. இடைத்தலம் என்றால் அரசியல் அமைப்பின் படி ஊர் மற்றும் மாவட்டத்திற்கு இடையில் ஆளுநர் நிர்ணயிக்கும் தலம்.

கட்டடம் தொகு

கல், செங்கல், மண், உலோகம், மரம் மற்றேதேனும் பொருட்கள் கொண்டு உருவாக்கிய வீடு, சிறிய கட்டடம், தொழுவு, குடில், கடை, குளியல் மற்றும் கழிவறை, கூடாரம் மற்ற ஏதேனும் எடுப்பு.

இடைத்தேர்தல் தொகு

பொது தேர்தல் அல்லாத தேர்தல்

வேட்பாளர் தொகு

ஏதேனும் தேர்தலில் வேட்பாளராக முறைப்படி பெயர் பரிந்துரைக்கப்பட்வரோ பரிந்துரைக்கப்பட்டதாக உரிமைக் கோருபவரோ ஆன நபர்

தற்செயல் ஒழிவு தொகு

பதவிக்காலம் முடிவதற்குள் அப்பதவியில் வரும் ஒழிவு.

குழு தொகு

கேரள உள்ளாட்சி சட்டத்தின் படி உருவாக்கப்படும் நிலைக்குழு அல்லது ஏதேனும் தேவைக்காக உள்ளாட்சி உருவாக்கும் மற்ற ஏதேனும் குழு.

தொகுதி தொகு

ஏதேனும் தலத்திலுள்ள உள்ளாட்சிக்கு ஓர் உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டிய பகுதி.

ஊழல் செய்கை தொகு

கேரள உள்ளாட்சி சட்டம் 120-ன் படி ஏதேனும் ஒரு நடவடிக்கை.

தேர்தல் முறையீடு செலவு தொகு

ஏதேனும் ஒரு தேர்தல் முறையீடு விசாரனைக்கும் அது தொடர்பான மற்ற தேவைகளுக்கும் ஆகும் எல்லா இழப்புகள், கட்டணங்கள் மற்றும் செலவுகள்

மாவட்டம் தொகு

வருவாய் மாவட்டம்

மாவட்ட தேர்தல் அலுவலர் தொகு

கேரள உள்ளாட்சி சட்டம் பிரிவு 13(1)-ன் படி மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கும் அலுவலர்.

மாவட்ட உள்ளாட்சி தொகு

கேரள உள்ளாட்சி சட்டம் 14(1)சி படி மாவட்டதலத்தில் ஊரக பகுதிகளை ஆட்சி செய்ய உருவாக்கபடும் உள்ளாட்சி. இத்தேவைக்காக மாநில அரசு மாவட்டத்திற்குள் நிச்சயிக்கும் ஊரக பகுதிகள் மாவட்ட உள்ளாட்சி பகுதி எனப்படும்.

வாக்காளர் தொகு

ஏதேனும் உள்ளாட்சியின் ஒரு தொகுதியில் நடப்பில் உள்ள வாக்காளர் பட்டியலில் பேயர் சேர்க்கப்பட்டு இந்த சட்டத்தின் 17-ம் பிரிவின் படி தகுதி இழப்பு செய்யபடாத அணைவரும்.

வாக்குரிமை தொகு

தேர்தலில் வேட்பாளராக போட்டியிடவோ போட்டியிடாமல் இருக்கவோ வேட்பு மனு திரும்பபெறவோ பெறாதிருக்கவோ வாக்களிப்பதற்கோ ஒரு நபர்க்குள்ள உரிமை.

பொது தேர்தல் தொகு

தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் உள்ளாட்சியின் கலாவதி பூர்த்தியான பின்னரோ அல்லாமலொ உள்ளாட்சி உருவாக்கத்திற்கோ மறு உருவாக்கத்திற்கோ வேண்டி நடத்தப்படும் தேர்தல்.

அரசு தொகு

மாநில அரசு

வீடு தொகு

வசிப்பிடமாகவோ அதனுடன் சேர்ந்தோ பயன்படுத்த நினைப்பதும், பொது வழியில் இருந்து குறிப்பாக முன்வாசல் உள்ளதுமான ஒரு கட்டடம் அல்லது குடில் என்று பொருள் படும். ஆனால் கடையோ, பட்டறையோ, சேமிப்பு கிடங்கோ, வாகனங்கள் நிறுத்தும் இடமோ, பேருந்து நிறுத்தமோ இதில் உட்படுவதில்லை.

குடில் தொகு

மரம், மண், புல், ஓலை, இலை ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்படும் தாற்காலிக தன்மையுள்ள நிர்மானம்.

சந்தை தொகு

தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மீன், இறைச்சி, வேறு ஊணவுப் பொருட்கள் வாங்க விற்க கால்நடை, பறவை, வேளாண் உற்பத்தி பொருள், சிறுதொழில் உற்பத்தி பொருள் வாங்க விற்க மக்கள் கூடும் இடம் அல்லது அதற்காக ஒதுக்கப்பட்ட இடம். ஆனால் ஒரு கடையோ ஐந்துக்கு மிகையாகாத கடைகளையோ சந்தை என கருதமுடியாது.

உள்ளாட்சியின் உடமையில் உள்ளதோ, உள்ளாட்சியால் உருவாக்கப்பட்டு பரிபாலிக்கப்படுவதோ ஆன பொது சந்தைகளோ அல்லது தனியார் சந்தைகளோ இதில் உட்படும்.

உள்ளாட்சி தொகு

ஏதேனும் ஓர் ஊராட்சி, மண்டல உள்ளாட்சி அல்லது மாவட்ட உள்ளாட்சி என பொருள்படும்.

தலைவர் தொகு

ஏதேனும் ஓர் ஊராட்சி, மண்டல உள்ளாட்சி அல்லது மாவட்ட உள்ளாட்சி தலைவர். ஏதேனும் காரணத்தால் தலைவர் இல்லயேல் துணைத் தலைவர் என பொருள் படும்

வட்டார தன்னாட்சி நிறுவனம் தொகு

கேரள உள்ளாட்சி சட்டம் பிரிவு 4-ன் படி உரவாக்கப்படும் உள்ளாட்சி என்றோ கேரள நகரமயச் சட்டம் பிரிவு 4-ன் படி உருவாக்கபடும் நகரமயம் என்றோ கூறலாம்.

வாக்கு சாவடி தொகு

ஓர் உள்ளாட்சிக்கு தேர்தல் நடத்த நிச்சயிக்கப்பட்ட ஏதேனும் இடம்.

ஜனத்தொகை தொகு

மிகவும் கடைசியாக கணக்கு எடுக்கப்பட்டு அதிகார பூர்வமாக வெளியிடப்பட்ட ஜனத்தொகை

உறுப்பினர் தொகு

ஏதேனும் ஒரு உள்ளாட்சி தொகுதியில் இருந்து இந்த சட்டம் பிரிவு 83-ன் படி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படும் வேட்பாளர்.

மாநிலம் தொகு

கேரள மாநிலம்

மாநில தேர்தல் ஆணையம் தொகு

அரசியல் அமைப்பின் உறுப்பு 243(கே)-ன் படி ஆளுநர் நியமிக்கும் தேர்தல் ஆணையரும், அவர் உருவாக்கும் அலுவலகமுறையும் உட்படும் ஆணையம்.

செயலாளர் தொகு

ஏதேனும் தலத்தில் உள்ள உள்ளாட்சியின் செயலாளர்.

ஊர் நிர்வாகி தொகு

ஒரு வருவாய் ஊரின் பொருப்பில் உள்ள அலுவலர்.

ஆண்டு தொகு

ஒரு நிதி ஆண்டு

நீர்த்தடம் தொகு

இயற்கையானதோ செயற்கையானதோ ஆன நதி, அருவி, நீரோடை ஆகியன.

ஊராட்சி தொகு

இந்த சட்டம் பிரிவு 4(1)எ-ன் படி ஓர் ஊரில் அல்லது ஒன்றிற்கு மேலான ஊர்களை ஒன்றினைத்து உருவாக்கப்படும் உள்ளாட்சி.

ஊரக-அவை தொகு

அரசியல் அமைப்பில் உட்பட்ட அடிமட்டத்தில் உள்ள மக்கள் அதிகார அவையே ஊரக-அவை. செயல்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் தயாரிப்பதிலும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பதிலும், திட்டப்பணிகளிலும் வட்டார மக்களின் பங்களிப்பை உறுதிசெய்யும் மக்கள் வேதியாகும் இது. ஊரக-அவை செயல்பாட்டில் பங்கெடுக்கும் போது ஒவ்வொரு குடிமகனும் தான் உட்படும் சமூகத்தின் பகுதியின் ஆட்சியிலும் வளர்ச்சியிலும் பங்களிப்பாளராகிறார். ஊரக-அவை வெறும் ஆலோசனை தரும் வேதியல்ல. வட்டார ஆட்சியின் மிக முக்கிய பாகமாகும். மூலசட்டத்தில் முக்கிய மாற்றங்கள் உட்படுத்தி 1999-ல் கொண்டுவரப்பட்ட கேரள உள்ளாட்சி சீர்திருத்த சட்டம் ஊரக-அவையின் அதிகாரம், செயல்பாடு, பொருப்பு ஆகியன தெளிவாக உட்படுத்தபட்டுள்ளது. [1].

அமைப்பு தொகு

இந்திய அரசியல் அமைப்பு பாகம் IX-ல் உள்ளாட்சி என்ற இயலில் உறுப்பு 243B ஊரக-அவையை குறிப்பிடுகிறது. ஒவ்வொரு உள்ளாட்சியிலும் ஊர பகுதியில் வாக்காளர் பட்டியலில் நிலவில் பெயர் உட்படுத்தபட்ட எல்லா வாக்காளர்களும் உடுபடும் வேதியாகும் ஊரக-அவை.

உறுப்பு 243A-ன் படி மாநில சட்டமன்ற சட்டம் வாயிலாக கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் செயல்பாடுகள் நடப்பிலாக்க ஊரக-அவைகளுக்கு முடியும்.

கேரள உள்ளாட்சி சட்டம் இயல் 11 பிரிவு 3(1)-ன் படி ஊராட்சியின் ஒவ்வொரு தொகுதியும் அரசியல் அமைப்பின் 243G-ல் குறிப்பிட்டுள்ள ஊரகம் எனும் நிலைக்கு ஆளுநர் திட்டபடுத்தி வெளியிடும் பகுதியில் ஒவ்வொரு ஊரக-அவை நிலவில் வரும்.

ஓர் ஊரக-அவை உட்படும் தொகுதின் ஊராட்சிமன்ற உறுப்பினர் அந்த ஊரக-அவையின் நடத்திப்பாளர் ஆவார். நடத்திப்பாளரால் தன் கடமையை உடல் ரீதியாக அல்லது வேறு காரணத்தால் செயலாற்ற முடியாது வரும் பொது அருகில் உள்ள தொகுதிக்கான உறுப்பினரை குறிப்பட் ஊரக-அவையின் நடத்திப்பாளராக அமர்த ஊராட்சி தலைவர் கடமைப்பட்டுள்ளார்.

ஊராட்சி பரிந்துரைக்கும் அலுவலர் ஊரக-அவையின் இணைப்பாளராக செயல்படுவார். ஊரக-அவையின் கூட்டங்கள் கூட்டுதல், நடத்தல், தீர்மானங்கள், கூட்டதின் நடவடிக்கை ஆகியன தொடர்பாக குறிப்புகள் எடுத்து பத்திரபடுத்தவும் துடர் செயல்பாட்டிற்கு நடத்திப்பாளருக்கு உதவுதலும் இணைப்பாளரின் கடமையாகும்.

ஊரக-அவைக் கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் தலைமை தாங்க வேண்டும். தலைவர் இல்லை என்றால் துணை தலைவர், அவரும் இல்லை என்றால் நடத்திப்பாளர் தலைமை தாங்க வேண்டும்.

கூட்டங்கள் தொகு

ஊரக-அவையின் கூட்டம் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட்டப்பட வேண்டும். தொடர்ந்துள்ள இரண்டு கூட்டங்களுக்கு இடையிலுள்ள கால அளவு மூன்று மாதங்களுக்கு மிகையாதல் கூடாது. இரண்டு இயல்பான கூட்டங்களுக்கு இடையில் சிறப்பு கூட்டம் கூட்டவோ அல்லது ஆண்டில் நான்கிற்கு மேலான இயல்பான கூட்டங்கள் கூட்டவோ இது தடையாகது. ஊரக-அவையின் நடத்திப்பாளர் ஊராட்சி தலைவருமாக கலந்தாலோசித்து ஊரக-அவைக் கூட்டம் நடக்கும் இடம், நேரம், தேதி ஆகியன தீரமானித்து கூட்டம் பற்றிய தகவலை அறிவிப்பு மூலம் ஊரக-அவை அங்கத்தினர்களுக்கு தெரியபடுத்த வேண்டும். அவை நடத்திப்பாளர் வட்டாட்சி மன்ற உறுப்பினர், மாவட்டாட்சி மன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரைக் கட்டாயமாக ஆழைத்தல் வேண்டும்.

சிறப்பு கூட்டம் தொகு

ஏதேனும் ஊரக-அவையின் பத்து சதவீதத்திற்கு குறையாத அங்கத்தினர் ஏதேனும் குறிப்பிட்ட தேவைக்காக எழுத்து மூலமாக ஊரக-அவையை கூட்ட கேட்டுக்கொண்டால் நடத்திப்பாளர் குறிப்பிட்ட அறிவிப்பு கிடைத்து 15 நாட்களுக்குள் ஊரக-அவையின் ஒரு சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்.

கூட்டத்திற்கு போதுமான ஆட்கள் தொகு

ஊரக-அவை நடத்திப்பிற்கு போதுமான ஆட்கள், குறிப்பிட்ட ஊர்பகுதியின் வாக்காளர் பட்டியலில் பேயர் சேர்க்கபட்டுள்ள வாக்காளர்களின் 10 சதவீதம ஆகும். ஆனால் போதுமான ஆட்கள் வராத காரணத்தால் கூட்டம் மாற்றிவைக்க வேண்டிவரும் போது, அடுத்த கூட்டதிற்கான போதுமான ஆட்கள் ஐம்பது ஆகும்.

உள்ளாட்சி அமைப்பும் உருவாக்கும் தொகு

அட்டவணை : வட்டார தன்னாட்சிகள்
வரிசை எண் தன்னாட்சி நிறுவனத்தின் தன்மை மொத்த எண்ணிக்கை
1 ஊராட்சி 941
2 மண்டல உள்ளாட்சி 152
3 மாவட்ட உள்ளாட்சி 14
4 நகராட்சி 87
5 மாநகராட்சி 6
மொத்தம் 1209

இந்திய அரசியல் அமைப்பின் உறுப்பு 243 B-ன் படி மாறுபட்ட தலங்களில் உள்ளாட்சிகளுக்கு வடிவம் கொடுத்து முத்தல வட்டார தன்னாட்சி நிறுவன சட்டம் உருவாக்க அந்தந்த மாநில சட்டமன்றங்களுக்கு பொருப்புள்ளது. இதன் படி கேரள மாநிலத்தில் ஊர்தலத்தில் ஊராட்சியும், இடைத்தலத்தில் மண்டடல உள்ளாட்சி, மாவட்ட தலத்தில் மாவட்ட உள்ளாட்சி நிலவில் வந்தன. ஊரக பகுதிகளில் ஜனநாயக ஆட்சி நிறுவனங்களாக முத்தல உள்ளாட்சிகள் உருவாக்கவும் அவைகளின் பெயர்கள் நிர்ணயிப்பதற்கான அதிகாரம் மாநில அரசைச்சாரும்.

தொடர்புற்ற உள்ளாட்சி தேவைப்படுவதாலோ உள்ளாட்சியுமாக முறைப்படி ஆலோசித்தப் பின்போ முன்னதாக அறிவிப்பு வெளியிடுதல் வாயிலாக ஊராட்சியின் நிலப்பரப்பில் ஏதேனும் ஊரகத்தையோ அல்லது ஊரகங்களையோ உட்படுத்தி குறிப்பிட்ட உள்ளாட்சியின் நிலப்பரப்பை கூட்டவும், ஏதேனும் ஊரகத்தையோ ஊரகபகுதிகளையோ தவிர்த்து நிலப்பரப்பை குறைக்கவும், உள்ளாட்சியின் தலைமை இடத்தை மாற்றவும், பெயர் மாற்றம் செய்யவும் அரசிற்கு அதிகாரம் உண்டாயிருக்கும்.

ஓர் ஊராட்சியின் நிலப்பரப்பில் வருத்தும் மாற்றம் அந்த உள்ளாட்சியின் நிலவில் உள்ள ஆட்சிக்குழுவின் காலாவதி தீரும் முறைக்கு அல்லாது நடைமுறை படுத்தக் கூடாது. இவ்வாறு பிரிக்கப்படும் உள்ளாட்சியின் பொருப்புகள், சொத்துக்கள், வருவாய் இருப்பு ஆகியவைகளை தொடர்புற்ற உள்ளாட்சிகளுமாக ஆலோசித்து அரசின் முறையான ஆணையினால் நிச்சயப்படுத்தி கொடுக்கலாம்.

ஓரணியும் ஆட்சியும்

அரசு அரசிதழில் வெளியிடுவதன் வாயிலாக உருவாக்கும் உள்ளாட்சி, பொதுவான ஒரு பெயரும், பொது முத்திரையும், முறையான பின்தொடர்சை உரிமையும், ஓரணித்தன்மையும், சட்டப்படி ஏற்புடையதுமான நிறுவனங்களாக இருக்கும். இவ்வாறு ஏற்றுக்கொள்ளப் பட்ட பெயரில் முறையிடவும்(sue) முறையிடப்படவும்(sued), அசையும், அசையா சொத்துக்களை வைத்திருக்கவும் பரிபாலிக்கவும், கைமாற்றம் செய்யவும் ஒப்பந்தங்களில் ஏற்படவும் இன் நிறுவனங்களுக்கு முடியும். ஒவ்வொரு தலத்திலும் உள்ள உள்ளாட்சிக்கும் அவைகளுக்கு தரப்பட்டுள்ள பொருப்புகள், கடமைகள் செயல்படுத்த பொருப்பும், செயல்திறனும், அதிகாரமும் உண்டாயிருக்கும். இவ்வாறு ஓரணித்துவம் என்பதில் இருந்து நிலவில் வரும் ஓர் உள்ளாட்சி ஒற்றை குழு என்றும், ஆளும்கட்சி எதிர்க்கட்சி வேறுபாடு இல்லை எனவும் பொருள்படுகிறது.

உள்ளாட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை

நேரடி தேர்தல் வாயிலாக ஒவ்வொரு தலத்திலும் உள்ளாட்சியின் குறிப்பிட்ட பகுதிகளின் ஜனத்தொகையின் விகிதாச்சாரத்தில் நிச்சயப்படுத்தி அரசு அறிவிப்பு செய்திட்டுள்ள எண்ணிக்கையில் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு ஜனத்தொகைக் கணக்கெடுப்பின்படி அந்தந்த தலத்தில் உறுப்பினர் எண்ணிக்கையை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கும் போது அந்தந்த உள்ளாட்சி பகுதிகளின் ஜனத்தொகையும் தேர்தலின் வாயிலாக நிரப்பப்பட வேண்டிய உறுப்பினர் எண்ணிக்கையும் இடையிலுள்ள விகிதாச்சாரம் முடிந்தவரை மாநிலம் முழுமைக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.

ஊராட்சியில் பதிமூன்றிற்கு குறையாததும் இருபத்திமூன்றிற்கு கூடாததுமான உறுப்பினர் எண்ணிக்கை இருந்தல் வேண்டும். மண்டல உள்ளாட்சியில் பதிமூன்றில் குறையாததும் இருபத்திமூன்றில் கூடாததுமான உறுப்பினர் எண்ணிக்கை இருந்தல் வேண்டும். மாவட்ட உள்ளாட்சியில் பதினைந்தில் குறையாததும் முப்பதில் கூடாததுமான உறுப்பினர் எண்ணிக்கை வேண்டும்.

மாநில தேர்தல் ஆணையம்- வட்டார தன்னாட்சி அமைப்புகளின் தேர்தல் முறை தொகு

தேர்தல் ஆணையத்தின் அலுவலர்களும் பணியாளர்களும்

அரசியல் அமைப்பின்படி மாநில அரசின் பரிந்துரையினால் ஆளுநர் நியமிக்கும், மாநில செயலாளர் பதவியில் குறையாத அலுவலர் மாநில தேர்தல் ஆணையர் ஆவார்.

மாநில தேர்தல் ஆணையத்தின் பொருப்புகள் நிறைவேற்றுவதற்காக ஆணையம் கேட்டுக்கொள்வதின் படி தேவையான ஊழியர்களையும் பணியாளர்களையும் விட்டுத்தர மாநில அரசிற்கு பொருப்புள்ளது.

ஆணையத்துடன் கலந்தாலோசித்து கூடுதல் செயலாளர் பதவியில் குறையாத ஓர் ஊழியரை ஆணையத்தின் செயலாளராக அரசு நியமிக்க வேண்டும்.

ஆணையத்தின் கீழ் வரும் ஊழியர்கள் பணியாளர்கள் அரசு ஊழியர்களாக துடரவும் அவர்களின் சேவை மற்றும் சம்பளம் அதேபடி துடர்வதுமாகும்.

இதற்கு அப்பால் இந்த சட்டத்தின் படி தேர்தல் நடத்தவும் வாக்காளர் தொகுதிகள் நிச்சயிக்கவும், வாக்காளர் பட்டியல் தயராக்கவும் புதுப்பிக்கவும் வேண்டி அரசு அல்லது வட்டார தன்னாட்சி நிறுவனத்தின் ஊழியர்களை அரசுமாக ஆலோசித்து மாநில தேர்தல் ஆணையம் நியமிக்கலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு தேர்தல் அலுவலரை ஆணையம் நியமிக்கலாம், அரசுமாக ஆலோசித்து ஓர் அரசு ஊழியரையோ, வட்டார தன்னாட்சி நிறுவனத்தின் ஊழியரையோ தேவை என்று கருதும் முறைக்கு ஒன்றிற்கு கூடுதலான ஊழியர்களை மாவட்ட தேர்தல் அலுவலர்களாக பொருப்புகளை நிறைவேற்ற நியமிக்கலாம்.

ஒன்றிற்கு கூடுதலானவரை நியமிக்கும் முறைக்கு அவர்களின் அதிகார வரம்பு உட்படும் பகுதிகளை நிச்சயப்படுத்தி கொடுக்கவேண்டும்.

குறிப்பிட்ட பகுதியில் எல்லா வட்டார தன்னாட்சி நிறுவன வாக்காளர் தொகுதிகளிலும் தேர்தல் மேற்பார்வை வகித்தல் என்பது மாவட்ட தேர்தல் அலுவலரின் பொருப்பாகும்.

இந்த பொருப்புகளை மாநில தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு, வழிகாட்டல், கட்டுபாடு ஆகியவற்றிற்கு உட்பட்டு நிறைவேற்றவும் தேர்தல் தொடர்பான வேறு கடமைகளை செய்யவும் தேர்தல் அலுவலர் கடமைப்பட்டுள்ளார்.

ஊராட்சியின் வாக்காளர் பதிவு அலுவலரையும் அவருக்கு உதவியாக ஓர் உதவி வாக்காளர் பதிவு அலுவலரையும் அரசுமாக ஆலோசித்து வட்டார தன்னாட்சி நிறுவனத்தின் ஊழியர்களில் இருந்து ஆணையம் நியமிக்கலாம். வாக்காளர் தொகுதியின் வாக்காளர் பட்டியல் தயாராக்கல் புதுபித்தல் தொடர்பான பொருப்பு பதிவு அலுவலர்காகும்.

இந்த கடமைகளை நிறைவேற்ற பொருத்தமான ஊழியர்களை கட்டுப்பாடுகளுக்குட்பட்டு நியமிக்க பதிவு அலுவலர்க்கு அதிகாரம் உள்ளது. இக்கால அளவில் நியமிக்கப்படுபவர்கள் அரசு ஊழியர்கள் அல்லது வட்டார தன்னாட்சி நிறுவன ஊழியர்கள் ஆக இருக்கவேண்டும்.

உள்ளாட்சி மன்ற கூட்டங்கள் தொகு

விதிமுறைகளின் படி நிர்ணயிக்கப்படும் இடைவேளையில் உள்ளாட்சியின் சாதாரண கூட்டங்கள் நடத்தப்படவேண்டும். ஆனால் இரண்டு கூட்டங்களுக்கு இடையில் உள்ள இடைவேளை ஒரு திங்களுக்கு(மாதம்) மிகையாதல் கூடாது. அறிவிக்கை செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையின் மூன்றில் ஒன்றில் குறையாத எண்ணிக்கையில் உள்ள உறுப்பினர்கள் ஒரு முக்கிய தேவைக்காக கூட்டம் கூட வேண்டும் என எழுத்துபூர்வமாக தலைவருக்கு அறிவிப்பு தரப்பட்டால் உள்ளாட்சியின் ஒரு சிறப்பு கூட்டம் தலைவர் கூட்டவேண்டும்.

உள்ளாட்சி கூட்டத்திற்கு தலைவர் தலைமைதாங்க வேண்டும். தலைவர் இல்லாதப்படிக்கு துணை தலைவரும், இருவரும் இல்லாதபடிக்கு கூட்டம் தேர்ந்தெடுக்கும் ஏதேனும் உறுப்பினர் தலைமைத்தாங்க வேண்டும். கூட்டம் அமைதியாக நடத்தல், எழுப்பப்படும் பிரச்சனைகளில் தீர்வுகாணல், விவாத நேரம், முறைகளை கட்டுபடுத்தல் என்பவை தலைமையரின் பொருப்புகள் ஆகும். விவாத நிரல் தொடர்பான பிரச்சனைகளில் விவாதம் கூடாததும் அது தொடர்பான தலைமையரின் முடிவு இறுதியானதாக இருக்கும். பொது விடுமுறை நாட்களில் கூட்டம் கூடாது. சாதாரன கூட்ட நேரம் காலை 9-ற்கும் மாலை 6-ற்கும் இடையிலாக வேண்டும். அவசரக் காலங்களில் இதில் மாற்றம் வரலாம். கூட்டம் நடக்கும் இடம் உள்ளாட்சியின் தலைமை இடமாக இருந்தல் வேண்டும்.

நிலைக்குழு தொகு

ஒவ்வொரு உள்ளாட்சியிலும் இந்த சட்டம் கூறும் விதம் நிர்ணயிக்கப்பட்ட எண்ணத்தில் நிலைக்குழுக்கள் உறுவாக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட செயல்பாடுகளை நடப்பிலாக்க வேண்டியுள்ள துணைக் குழுக்களாகும் நிலைக்குழுக்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாவர் நிலைக்குழுவில் இடம்பெறுபவர்கள். தலைவர் எல்லா நிலைக்குழுவிலும் அதிகாரப்பூர்வ உறுப்பினராவார். கீழ் கூறப்பட்டுள்ள முறையிலாகும் முத்தல உள்ளாட்சிகளில் நிலைக்குழுக்களாக செயல்படுபவை.
1. ஊராட்சி
(i) நிதிக்கான நிலைக்குழு
(ii) வளர்ச்சிக்கான நிலைக்குழு
(iii) நலனுக்கான நிலைக்குழு
(iv) சுகாதாரம் மற்றும் கல்விக்கான நிதிக்குழு
2. மண்டல உள்ளாட்சி
(i) நிதிக்கான நிலைக்குழு
(ii) வளர்ச்சிக்கான நிலைக்குழு
(iii) நலனுக்கான நிலைக்குழு
(iv) சுகாதாரம் மற்றும் கல்விக்கான நிதிக்குழு
3. மாவட்ட உள்ளாட்சி
(i) நிதிக்கான நிலைக்குழு
(ii) வளர்ச்சிக்கான நிலைக்குழு
(iii) பொதுப் பணிக்கான நிலைக்குழு
(iv) சுகாதாரம் மற்றும் கல்விக்கான நிதிக்குழு
(v) நலனுக்கான நிலைக்குழு

உள்ளாட்சி குழுக்கள் தொகு

1. நிலைக்குழு

2. செயல்பாட்டு குழு

3. துணைக் குழு

4. சேரிக் குழு (Ward Committee)

5. இணைக் குழு

6. மேலாண்மைக் குழு

7. நிர்மான பணி குழு

8. வளர்ச்சிக் குழு

9. உரக-அவைத் துணைக் குழுக்கள்

10. மாவட்ட திட்டக் குழு

மாநில நிதி ஆணையம் தொகு

வட்டார தன்னாட்சி நிறுவனங்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும், நிதி சேகரிப்பு மற்றும் வினியோகித்தல் போன்றவற்றை பற்றி ஆய்ந்து பரிந்துரை செய்வதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அரசினால் நியமிக்கப்படும் அரசியல் அமைப்பின் படியுள்ள நிறுவனமாகும் மாநில நிதி ஆணையம்.

உள்ளாட்சி அலுவலர்களும் பணியாளர்களும் தொகு

வட்டார தன்னாட்சி நிறுவனத்தில் கீழ் கூறப்பட்டுள்ள அலுவலர்களும் ஊழியர்களும் உட்படுவர்.
1. செயலாளர்
2. உள்ளாட்சி அலுவலகத்தின் அலுவலர்களும் ஊழியர்களும். கணக்காளர், தலைமை எழுத்தர், எழுத்தர், கட்டணம் வசூலிப்பாளர், பியூன், தாற்காலிக மற்றும் பகுதி நேர ஊழியர்கள் உட்படுபவர்கள்.
3. உள்ளாட்சியில் சேவைக்காக விட்டுத்தரப்பட்ட துறைகளின் ஊழியர்கள்.
4. உள்ளாட்சியால் நடத்தப்படும் நிறுவனங்களின் அலுவலர்கள் ஊழியர்கள்.
5. உள்ளாட்சியின் வழிகாட்டுதல் படி செயல்பட வேண்டியுள்ள அலுவலர்கள் ஊழியர்கள்.
6. உள்ளாட்சிகளின் கண்காணிப்பு, பரிசோதனை போன்றவை நடத்தும் அலுவலர்கள்.
7. தணிக்கைத் துறை அலுவலர்கள்
8. உள்ளாட்சி சட்டம் மற்றும் விதிமுறைகளின் படி சிறப்பு அதிகாரங்களும் பொருப்புகளும் நல்கப்படும் அலுவலர்கள்.

வட்டார தன்னாட்சி ஒழுங்காணையர்(Local Self Government Ombudsman) தொகு

ஒழுங்காணையர் என்பது தன்னிச்சை மற்றும் நடுநிலையான ஒரு நீதியக தகுதிக் குறிய புகார்களை பரிசோதித்தல் மற்றும் பரிகார ஏற்பாடாகும். கேரள உள்ளாட்சி சட்டத்தின் இயல் 25-B-யின் வாயிலாக வட்டார தன்னாட்சி ஒழுங்காணையர் முறை உருவாக்கப் பட்டுள்ளது. உள்ளாட்சிகளுக்கும் நகரமயங்களுக்கும் இந்த முறை பொருந்துவதாகும். வட்டார தன்னாட்சி நிறுவனங்கள், அவற்றின் ஜன பிரதிநிதிகள், அலுவலர்கள் போன்றோரின் மற்றும் பொது ஊழியர்களின், ஊழல், முறைகேடான ஆட்சி, சட்டவிரோதம் போன்ற எந்த ஒரு நடவடிக்கை தொடர்பாகவும் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளோ, புகார்களோ விசாரிக்க, தீர்ப்பாக்க, மற்றும் நடப்பிலாக்க அதிகாரப் படுத்தப்பட்டு, மாநில அளவில் உருவாக்கப்படும் நீதியக தகுதிக் குரிய நிறுவனமாகும் வட்டார தன்னாட்சி ஒழுங்காணையர். பொது ஊழியர்கள் என்ற பிரிவில் வட்டார தன்னாட்சி நிறுவனத்திற்கு கீழ் உள்ள அலுவலர், பணியாளர்கள, தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர், தலைவி(Chairperson), உறுப்பினர் மற்றும் வட்டார தன்னாட்சி நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலகங்களின் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உட்படுவார்கள்.

அமைப்பு

தலைமை அமைச்சர்(Chief Minister)-ன் பரிந்துரையின் பேரில் உயர்நீதிமன்ற நீதிபதியின் பொருப்பில் இருந்த ஒருவரையே ஒழுங்காணையராக ஆளுநர் நியமிக்க வேண்டும். இவ்வாறு நியமிக்கப்படும் நபர் ஆளுநரின் (சார்பாளர்) முன்பாக உறுதி மொழி எடுத்து பதவியை ஏற்றேடுக்க வேண்டும். பதவி ஏற்றேடுத்த நாள் முதல் மூன்று ஆண்டு வரையே பதவியில் தொடர முடியும். ஆனால் சுயமாக ஆளுநருக்கு பதவிவிலகுதல் கடிதம் தந்து பதவியில் இருந்து விலகலாம். நடவடிக்கைகளை சரிவர செய்யாமை தகுதியின்மை என்பவையினால் மாநில சட்டமன்றத்தின் மூன்றில் இரண்டு உறுப்பினர்களின் பெரும்பான்மையினரால் தீர்மானம் நிறைவேற்றப்படுவதனால் மாநில அரசு ஆளுநரின் உத்தரவின் வாயிலாக ஒழுங்காணையரை நீக்கலாம். பதவிகாலம் முடிவுற்றால் மீண்டும் பதவியில் அமர்த்தவோ, மாநில அரசின் கீழ் உள்ள, வட்டார தன்னாட்சி நிறுவனத்தின் கீழ் உள்ள மற்றும் தன்னாட்சி அதிகாரம் உள்ள எந்த ஒரு நிறுவனத்திலும் மீண்டும் பதவி வகிக்க முடியாது.

ஒழுங்காணையரின் செயல்பாட்டிற்காக ஒரு செயலாளரும் ஒழுங்காணையரின் அனுமதியுடன் அரசு நிச்சயிக்கும் அலுவலர்களும் உண்டாயிருப்பார்கள்.

வட்டார தன்னாட்சி தீர்ப்பாயம் தொகு

உள்ளாட்சிகளும் நகரமயங்களும் உட்படும் வட்டார தன்னாட்சி நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக தரப்படும் மேல்முறையீடு, மறுபரிசீலனை ஆகியன பெறவும் அதில் தீர்ப்பு நல்கிடவும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு நியமிக்கும் நீதியக போலாமை அலுவலரே வட்டார தன்னாட்சி தீர்ப்பாயர் அல்லது தீர்ப்பாயம்.

மாநில அரசு கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுமாக ஆலோசித்து அரசு வெளியீடு வழியாக நியமிக்கும் மாவட்ட பதவியில் உள்ள ஒரு நீதித்துறை அலுவலரே மாவட்ட தன்னாட்சி தீர்ப்பாயம்.

இவ்வாறு உறுவாக்கப்படும் தீர்ப்பாயத்திற்கு ஏற்படுத்தி கொடுக்கும் விடயங்களில் உரிமையியல் நடைமுறை தொகுப்பின்(Code of Civil Procedure) படி உரிமையியல் நீதிமன்ற செயல்திறனைக் கொண்டிருக்கும்.

  • அழைப்பாணை புறப்பெடுவித்து தரப்பினர்களையும் சாட்சிகளையும் அழைப்பித்தல்.
  • பிடியாணை புறப்பெடுவித்து கட்டாயமாக முன்தோன்ற செய்தல்
  • ஆவணங்கள் பத்திரங்கள் ஆகியவையை பரிசோதனைக்கு சமர்ப்பிக்க கோரல்.
  • நிலவரத்தை அறிய ஆணையத்தை ஏற்படுத்தல்.

தீர்ப்பாயத்தின் முன்னில் நடக்கும் எந்தவொரு நடவடிக்கையும் இந்திய தண்டனை தொகுப்பு(Indian Penal Code)-ன் படி நீதியக நடவடிக்கையாக கருதவேண்டும். தீர்ப்பாய செயல்பாட்டிற்கு அரசு நியமிக்கும் அலுவலர்களும் ஊழியர்களும் தீர்ப்பாயத்தின் செயல்பாட்டிற்கு உடந்தையாக இருக்க வேண்டும்.

மாநிலத்தின் 14 மாவட்டங்களுக்குமாக ஒரு தீர்ப்பாயம் மட்டுமே இப்போது செயல்படுகிறது. திருவனந்தபுரமே தீர்ப்பாயத்தின் தலைமை இடமாகும்.

உள்ளாட்சி தணிக்கை முறை தொகு

மாறுபட்ட தரத்திலுள்ள தணிக்கை முறையாகும் உள்ளாட்சிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் படியாக உள்ளாட்சி நிதியிருப்பின் பயன்தக்க செலவும் கட்டுப்பாடும் உறுதி செய்யும் விதம் வரவு செலவு கணக்கு பதிந்து வைக்கவும் ஆண்டு இறுதி அறிக்கை தயாரிக்கவம் வேண்டியுள்ளது.

கணக்குகள் சரிபார்க

  • வட்டார நிதியிருப்பு தணிக்கை துறையின் வாயிலாக பரிசோதித்தல்
  • உள்ளார்ந்த தணிக்கை
  • ஊரக-அவை வழியான சமூக தணிக்கை
  • பொது கணக்கர் வாயிலாக சோதனை தணிக்கை
  • சிறப்பு தணிக்கை

ஆகிய தணிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள் தொகு

மேலும் காண்க தொகு

மேற்கோள் தொகு

  1. Constitution (73rd Amendment) Act