கேரள சுகுணா போதினி
கேரள சுகுணா போதினி (Keraliya Suguna Bodhini) இந்தியாவின் கேரள மாநிலத்தில் பேசப்படும் மலையாள மொழியில் வெளியிடப்பட்ட முதல் பெண்கள் பத்திரிகையாகும். [1] கேரள சுகுணபோதினி என்றும் அழைக்கப்படுகிறது. முதன்முதலில் 1886 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் இப்பத்திரிகை வெளியிடப்பட்டது. [1][2] கேரள வர்ம வலிய கோயி தம்புரான், என்.சி. நாராயண பிள்ளை மற்றும் கே.சிதம்பரம் வாத்தியார் ஆகியோர் இதில் எழுதி பெரும்பங்கு வகித்தனர். [3]
எம்.சி நாரயணப்பிள்ளை, சிதம்பரம் வாத்தியார், | |
வகை | மகளிர் இதழ் |
---|---|
இடைவெளி | இதழ் |
முதல் வெளியீடு | 1886 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம், |
சுகுணபோதினியின் 1976 ஆம் ஆண்டு பதிப்பானது தார்மீக மனசாட்சி, சமையல், சிறந்த பெண்களின் சுயசரிதைகள் மற்றும் வளர்ப்பு, அர்ப்பணிப்பு, தாய்மை பெண்மணியை ஊக்குவிக்கும் பிற அறிவூட்டும் தலைப்புகள் போன்ற படைப்புகளை ஊக்குவித்தது. இதழில் அரசியல் தொடர்பான படைப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. [4] கல்வி, பயணம் மற்றும் உடைக்கான பெண்களின் உரிமைகள் போன்றவையும் இதழில் விவாதிக்கப்பட்டன.
1886 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இதழ் ஆறு மாதங்களுக்குப் பின்னர் நிறுத்தப்பட்டது. பத்திரிகை 1892 இல் மீண்டும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Teena Antony (2013). "Women’s Education: A Reading of Early Malayalam Magazines". Journal of Social Sciences 12 (3). http://journals.christuniversity.in/index.php/artha/article/view/725/538. பார்த்த நாள்: 15 February 2017.
- ↑ "When women make news". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 30 June 2016.
- ↑ "What Led to the End of Kerala's Matrilineal Society?". பார்க்கப்பட்ட நாள் 30 June 2016.
- ↑ "A magazine much ahead of its time". பார்க்கப்பட்ட நாள் 30 June 2016.