கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (Kerala State Pollution Control Board) என்பது கேரள அரசின் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழுள்ள ஒரு அமைப்பாகும். இந்த வாரியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை நடப்பிலாக்குவதற்கான பொறுப்பை வகிக்கின்றது. பலதரப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு சட்டங்களை நடப்பிலாக்க ஒழுங்குப்படுத்தும் அதிகார அமைப்பாக உருவாக்கப்பட்டதாகும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். இவ்வாரியம் மாநில மக்களுக்கு மாசற்ற சுற்றுச்சூழலைத் தந்திட வேண்டி செயல்படுகிறது. இந்த வாரியம் மாசுக் கட்டுப்பாட்டுக்கான தீர்வுக்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக, நிலத்தடி நீர், திடப் பொருள் மற்றும் வாயு தொடர்பான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
Kerala State Pollution Control Board
துறை மேலோட்டம்
அமைப்பு12 செப்டம்பர் 1974
ஆட்சி எல்லைகேரள அரசு
தலைமையகம்திருவனந்தபுரம், கேரளம்,
 இந்தியா
அமைப்பு தலைமை
  • கெ. சஜீவன், Chairman of the Board
மூல அமைப்புகேரள அரசின் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலத்துறை
வலைத்தளம்www.keralapcb.nic.in

வெளியிணைப்புகள்

தொகு